உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கமலா ஹாரிசுடன் ராகுல் தொலைபேசியில் பேசினாரா?

கமலா ஹாரிசுடன் ராகுல் தொலைபேசியில் பேசினாரா?

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொலைபேசியில் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இதனை துணை அதிபர் அலுவலகம் மறுத்துள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், ஜனநாயக கட்சி சார்பில் பைடன் களமிறங்கி உள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியில் உள்ளார். இதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பைடன் போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், கமலா ஹாரிசுடன், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொலைபேசி மூலம் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது. இதற்கு காங்., தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில், இதனை மறுத்து துணை அதிபர் அலுவலக அதிகாரிகள், ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேசவில்லை எனவும், அது குறித்த செய்தி உண்மையில்லை என தெரிவித்து உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAJ
ஜூலை 13, 2024 23:37

பேசி??? ....தம்பிடிக்கு பிரயோகனம் இல்ல.. வெத்து வேட்டு.. ..


sankaranarayanan
ஜூலை 13, 2024 22:13

ஊடகங்கள் எப்போதுமே நடக்காததை திரித்து சித்தரித்து சொல்லத்தான் செய்கின்றன என்னவோ சில செய்திகள் உண்மையாக இருக்கின்றன பெரும்பானவைகள் புனையப்பட்ட கதைகளாகவே போய்விடுகின்றன சொல்லத்தான் சொல்றிங்க பப்பு ஜனாதிபதி பைடனுடன் பேசினார் என்று கூறுங்களேன் யார் இதை உண்மையா பொய்யா என்று கேட்கப்போகிறார்கள்


subramanian
ஜூலை 13, 2024 22:07

கெட்டிக்கார புளுகு எட்டு நிமிடம் தாங்காது


subramanian
ஜூலை 13, 2024 22:06

இவர் அரசியலுக்கு தகுதியில்லாத நபர். தலைமை பண்புகள் துளியளவும் இல்லாதவர். மோடியின் மீதுள்ள வெறுப்பினால் கிறிஸ்தவமும் இஸ்லாமும் இவருக்கு ஒட்டு போடுகிறது .


Oru Indiyan
ஜூலை 13, 2024 19:33

How a Lunatic LoP can talk to VP?


R.MURALIKRISHNAN
ஜூலை 13, 2024 19:08

கண்ணடிக்காமல் இருந்தால் சரி.


கண்ணன்
ஜூலை 13, 2024 18:26

ஏதாவது பொய்களைச் சொல்லி ஒரு படிப்பறிவற்றவனை உயர்த்திவிட ஒரு படிப்பறிவற்ற கூட்டம் முக்கி முனகிக் கொண்டிருக்கிறது


Sundar R
ஜூலை 13, 2024 17:28

Whatever he does it causes fear followed by relief & relief followed by fear. He should be stopped. He appears to be unfit.


Swaminathan L
ஜூலை 13, 2024 16:53

ராகுல்காந்தியை ஒரு தலைவராக்கி விட வேண்டும் என்று புரண்டு காரியமாற்றுகிறது. அப்படியே பேசினாலும் பெஸ்ட் ஆஃப் லக் சொல்ல முடியுமோ? பைடனுக்குத் தெரிந்தால் சும்மா விடுவாரோ?


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 13, 2024 16:53

Did he talked in English?


SANKAR
ஜூலை 13, 2024 18:16

did he talked is grammatically incorrect.fitst learn good English.


Duruvesan
ஜூலை 13, 2024 20:45

Fitst illa நீ மொதல்ல ஒழுங்கா எழுத பழகு


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி