உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!

அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்கு காரணம் குறித்து பல்வேறு தகவல் வெளியாகியுள்ளன.கடந்த சில தினங்களாக அதிகம் கவனம் பெற்ற விஷயம் அமெரிக்க அதிபர் டிரம்பும், அமைதிக்கான நோபல் பரிசும் தான். தான் 7 போர்களை நிறுத்தியதற்காக, இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தான் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டு வந்தார். மேலும், நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறி வந்தார். இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதில் டிரம்பின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் காலத்திற்குப் பிறகே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 1ம் தேதிக்கு முன்பாக, நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிபர் டிரம்ப்பின் பெயரை பிப்.,1க்குப் பிறகு பரிந்துரை செய்துள்ளன. இதுவே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கான காரணமாகும். இது குறித்து நார்வேவைச் சேர்ந்த நோபல் பரிசு தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜோர்கன் வாட்னே பிரிட்னெஸ் கூறியதாவது; நோபல் பரிசு தேர்வு கமிட்டி, அனைத்து வகையான பிரசாரங்கள், ஊடக கவனத்தையும் பார்த்துள்ளது. அமைதிக்கு வழிவகுக்கும் காரணிகள் குறித்து ஆயிரக்கணக்கான கடிதங்களை ஆண்டுதோறும் பெறுகிறோம். நாங்கள் அமர்ந்திருக்கும் அறை தைரியம் மற்றும் நேர்மையால் நிரம்பியுள்ளது. எங்களின் முடிவை ஆல்பிரட் நோபலின் (நோபல் பரிசை அறிமுகப்படுத்தியவர்) செயல் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கிறோம், இவ்வாறு கூறினார். ஹென்றி ஜாக்சன் சொசைட்டியின் வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் தியோ ஜெனூ கூறுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் நீண்ட காலமாக நிலைக்குமா? என்று நிரூபிக்கப்படவில்லை. குறுகிய காலத்தில் சண்டையை நிறுத்துவதற்கும், மோதலின் அடிப்படை காரணங்களை தீர்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது,' இவ்வாறு அவர் கூறினார்.

டிரம்ப் பணி தொடரும்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் செயுங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கும், போரை நிறுத்துவதற்கும், உயிர்களை காப்பதற்கான பணிகளில் டிரம்ப் தொடர்ந்து ஈடுபடுவார். மனிதநேயத்திற்கான மனம் அவரிடம் உள்ளது. அமைதியை விட அரசியலை முன்னிறுத்துவதையே தேர்வுக்குழுவினர் முன்னிறுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

kumarkv
அக் 10, 2025 21:43

டிரம்புக்கு தான் கொடுக்கல ...நமது முதல்வருக்கு கொடுக்கலாம்


V K
அக் 10, 2025 21:38

டிரம்ப் தாத்தா நார்வே நாட்டுக்கு வரியை 400% போடு அதை அமெரிக்கர்கள் கட்டுவார்கள்


Mr Krish Tamilnadu
அக் 10, 2025 19:54

அமெரிக்க அதிபர் என்பது எவ்வளவு உயர்ந்த பதவி. உலகையே கைக்குள் வைத்து கொள்ள முடியும் அன்பால். அந்த பதவியில் உள்ளவர்க்கும் எட்டாத உயரத்தில் ஒருசில விசயங்கள், ஒருசில ஆசைகள் இருக்க தான் செய்கிறது. தன்னால் எல்லாம் முடியும் என நினைப்பவர்கள் இவரே ஒரு உதாரணம். விலைமதிப்பற்ற பொருட்கள் எந்த விலைக்கும் கிடைக்காது.


Rathna
அக் 10, 2025 19:13

இது தகுதிக்கான பரிசு. தறுதலைக்கான பரிசு அல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


Mohan
அக் 10, 2025 18:56

எனக்கா பரிசு இல்லேனு சொல்றீங்க ..போடுறா வரியா 1000% ...ஆனா செய்ய மாட்டார் அடுத்த வருஷம் கிடைக்காது அப்படிங்கிற பயம் வேற இல்லேனா செஞ்சிருவார் இந்த அதிபர் ...


கல்யாணராமன்
அக் 10, 2025 18:54

திருவிளையாடல் தருமி போல் ட்ரம்ப்


தாமரை மலர்கிறது
அக் 10, 2025 18:47

நோபல் பரிசு கொடுக்காததால், ட்ரம்ப் கோபம் கொண்டு இப்போது வெனிசுலா மீது தாக்குதல் நடத்த கூடும். இன்னும் ரெண்டு போரை துவக்க நேரிடும். போரை துவக்க கூடிய நிலையில் உள்ளவரை அமைதிக்காக ஊக்குவிக்காவிடில், விபரீதம் நேரும்.


Saai Sundharamurthy AVK
அக் 10, 2025 18:38

நோபல் கமிட்டி கேட்ட கேள்வி சரியானது தான். போரை நிறுத்தி விட்டால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விட்டது என்று அர்த்தம் ஆகாது. எப்படியும் பிரச்சினைகள் மறுபடியும் வெடிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே இருக்கும் நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்காமல் போரை மட்டும் நிறுத்தி விட்டு தம்பட்டம் அடிப்பதால் எந்த அர்த்தமும் இல்லை......


ஆரூர் ரங்
அக் 10, 2025 18:30

வெடிமருந்து TNT ஐக் கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் அதில் கிடைத்த பணத்தில் இப்பரிசளிப்பதை துவக்கினார். ஆக உலகிலேயே அதிக அளவில் ஆயுதங்களை விற்கும் அமெரிக்க ஜனாதிபதிதானே அதனைப் பெற தகுதியானவர்? நடந்தது அநியாயம்தான்.


Subburamu K
அக் 10, 2025 18:28

According to Trump's earlier statement, it is shame shame to USA


புதிய வீடியோ