உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா உடனான உறவை முறிக்கக்கூடாது: டிரம்புக்கு நிக்கி ஹாலே அறிவுரை

இந்தியா உடனான உறவை முறிக்கக்கூடாது: டிரம்புக்கு நிக்கி ஹாலே அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு விலக்கு அளித்து, இந்தியா போன்ற வலுவான நட்பு நாடுகளுடனான உறவை முறித்துக் கொள்ளக்கூடாது,'' என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கூறியுள்ளார்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்தார். அவரால் முடியாத காரணத்தினால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது வர்த்தக ரீதியில் வரியை உயர்த்தி வருகிறார். இதனை ஏற்க முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது.இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான நிக்கி ஹாலே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது. ஆனால், ரஷ்யா மற்றும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, 90 நாட்கள் விலக்கைப் பெற்றது. சீனாவுக்கு அனுமதி அளித்து, இந்தியா போன்ற வலுவான நட்பு நாடுடனான உறவை முறித்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Nathan
ஆக 06, 2025 11:19

இவர் அதிக விலைக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய போடும் திட்டம் தான் இவ்வளவு தூரம் இந்தியா மிரட்டப்பட காரணம். இவரின் விருப்பத்தை இந்தியா ஏற்றுக் கொண்டு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய மறுத்து கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தால் ஏழை நாடுகளின் நிலை பரிதாபமாக மாறும். ஏனெனில் மாற்று ஏற்பாடு எதனையும் ட்ரம்ப் ஏற்படுத்தி தர வில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 06, 2025 07:02

பகோடாஸ் பகோடாஸ் என்று தினமும் கதறும், கோல்மால்புர வண்டி கழுவுற மெச்சினு, அதாங்க எடுப்பு வந்து புலம்பி வெக்கும் பாருங்க ....


N.Purushothaman
ஆக 06, 2025 06:48

ரஷியாகிட்ட நாங்க மட்டும் அணுமின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியம் மற்றும் இதர பொருட்களை வாங்குவோம் ...அதே மாறி உக்ரைனை கொம்பு சீவு விட அவுங்களுக்கு தேவையான ஆயுதங்களை நேரடியாகவும் நேட்டோ நாடுகள் மூலமாகவும் வழங்குவோம் ..உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்வதை நாங்கள் நிறுத்தமாட்டோம் ....நாங்க அப்படிதான் ...எங்களை யாரும் கேள்வி கேக்க முடியாது...


தாமரை மலர்கிறது
ஆக 06, 2025 05:13

இந்தியாவுடன் உறவை முறித்தால், பிரிக்ஸ் கரன்சியை கொண்டுவந்து அமெரிக்காவின் டாலர் முதுகெலும்பை இந்தியா உடைக்கும். மோடியை கண்டு ட்ரம்ப் பயந்து சாகும் நேரம் வர போகிறது.


MARUTHU PANDIAR
ஆக 06, 2025 03:00

சீனாவை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாது. இந்தியா மீது காய் வைக்கலாம். காரணம் இங்கு பாக் பயங்கரவாதிகள், ரோகிங்கியாக்களின் தானைத் தலைவி, காளிஸ்தான் போஷகர்கள், "விவசாயி"களின் பாத்து காவலர், சீன, பாக் ஆதரவு இந்திய எதிர்ப்பு பப்பு, மற்றும் குடும்பம், பணத்துக்கு வோட்டை ஏமாற்றி வாங்கி தவறாமல் ஆட்சியை பிடிக்கும் பிரிவினை சக்திகள் இப்படி ஆயிரக்கணக்கில் மிக சூப்பராக குழி பறித்துக் கொண்டிருப்பதால் இங்கு தான் கை வைத்துப் பார்க்கலாம். பாவம் மோடி, அமித்ஷா, ஜெயி சங்கர் போயின்றோர் எவ்வளவு தான் எதிர் ஆட்டம் ஆடுவார்கள்? விலை போன மீடியாக்கள் வேறு. இது ஒரு டிஃபரென்ட் நாடுங்க .


Bhakt
ஆக 05, 2025 23:51

அமெரிக்காவுக்கு சரியான செருப்படி டிரம்ப் வாங்கி தருவார்.


viki raman
ஆக 05, 2025 23:13

Nikki khale lip correct ta pesudhu ulgathulaye alagu un lip than mr. president TRUMP


Natarajan Ramanathan
ஆக 05, 2025 23:02

இந்தியர்கள் மட்டும் அல்ல இந்தியா வம்சாவழியினரும் புத்திசாலிகள்தான். இதை டிரம்ப் உணர்ந்துகொள்வது அமெரிக்காவுக்கு நல்லது.


Maruthu Pandi
ஆக 06, 2025 10:08

இந்திய வம்சாவளியினர் என்று நினைக்காதீர்கள் நண்பா . அவர்கள் அமெரிக்கர்களாகவே தங்களை இனம் காண விரும்புகிறார்கள் .உங்களுக்கு அங்கே பால்ய நண்பர்கள் இருந்தால் அது இன்னேரம் புரிந்து இருக்கும்