உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணு மின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: சேதமில்லை என்கிறது ரஷ்யா

அணு மின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: சேதமில்லை என்கிறது ரஷ்யா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள அணு மின் நிலையம் மீது, உக்ரைன் ஏவிய டிரோன் தாக்குதலில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது, அணுக்கதிர் வீச்சு எதுவும் இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நீடித்துவரும் நிலையில், ஒரு புறம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இரு நாடுகளும் மாற்றி மாற்றி தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.உக்ரைனின் சுதந்திர தினமான இன்று,ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தில் இன்று உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த ட்ரோன் தாக்குதல்கள் பல மின் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது குறிவைக்கப்பட்டவை. இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தில் ஒரு டிரான்ஸ்பார்மர் மட்டுமே சேதமடைந்தது. தீ பற்றினாலும் உடனடியாக அது அணைக்கப்பட்டது. கதிர்வீச்சு அளவுகள் சாதாரண வரம்புகளில் தான் இருந்தன என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.ட்ரோன் தாக்குதல் நடந்ததாக ரஷ்யா கூறிய நிலையில், அதற்கு உக்ரைன் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. உக்ரைன் ராணுவத்தின் செயல் பொறுப்பற்றது என்று ரஷ்யா விமர்சனம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ManiMurugan Murugan
ஆக 24, 2025 22:44

போர்களை நிறுத்தும் வல்லுனர் அமெரிக்க அதிபர் என்ன ஆனார்


nagendhiran
ஆக 24, 2025 19:54

திமுக ஒரு?திட்டத்தை எதிர்கிறது என்றாலே அது நல்ல திட்டமாகதான்"இருக்கும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை