உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வாத்தை சாப்பிட்டாச்சு...பிடிங்க பணத்த... வங்கதேசத்தில் நடந்த கூத்து; பிரதமர் இல்லம் தேடி வரும் பொருட்கள்!

வாத்தை சாப்பிட்டாச்சு...பிடிங்க பணத்த... வங்கதேசத்தில் நடந்த கூத்து; பிரதமர் இல்லம் தேடி வரும் பொருட்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச பிரதமர் இல்லத்தில் திருடிச் செல்லப்பட்ட பொருட்களை மாணவர்கள் அமைப்பினர் திரும்ப பெறும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சி கவிழ்ந்ததுவங்கதேசத்தில் விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் போராட்டம் என்ற பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இதனால், வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் ஷேக் ஹசீனா, சொந்த நாட்டில் இருந்து வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அதன்பிறகு, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசு அமைந்தது.

திருட்டு

இதனிடையே, போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் இல்லத்திற்குள் புகுந்து, அங்கிருந்து பொருட்களை எல்லாம் திருடிச் சென்றனர். ஷோபா, சேர், நகை, பணம் மற்றும் அவரது ஆடைகள் என அவரது மாளிகையே சூறையாடப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வேண்டுகோள்

மாணவர்களின் விருப்பப்படி, ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டதால், திருடிய பொருட்களை மீண்டும் கொண்டு வந்து வைக்குமாறு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனை, ஏற்று திருடு போன பொருட்கள் ஒவ்வொன்றாக, அரசு இல்லமான ஞானப பனுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதற்காக, மாணவர்கள் சார்பில் நுழைவு வாயிலில், திருடு போன பொருட்களை பெறுவதற்காக கவுன்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

சமைத்து சாப்பிட்டாச்சு

சேர், ஷோபா, மேஜை, ப்ரிட்ஜ், ஆப்பிள் ஐமேக், மேக் புகஸ், ஐபோன்கள், ஜிம் உபகரணங்கள், கிட்டார், புறாக்கள், பூனை என பல பொருட்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அதிலும் ஒருவர் எடுத்துச் சென்ற வாத்தை சமைத்து உண்டு விட்டதால், அதற்குரிய பணத்தை கொடுத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் எடுத்துச் சென்ற சுமார் 75 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திரும்ப ஒப்படைத்துள்ளார். அதேபோல, நகைகள், வைர மூக்குத்தி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களும் திரும்ப வழங்கப்பட்டது.

திருடர்கள் அல்ல

இது குறித்து மாணவர்களின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான ஷாகிப் ஆரிப்பின் கூறியதாவது:- பிரதமர் ஷேக் ஹசீனா பதவி வில வேண்டும் என்று தான் போராட்டம் நடத்தினோம். ஆனால், மக்கள் பிரதமரின் இல்லத்தில் நுழைந்து, உணர்ச்சிமிகுதியில் சில பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர். மேலும், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டனர். நாங்கள் திருடர்கள் அல்ல. இது அனைத்தும் நமது நாட்டு சொத்து. எனவே, நாம் அதனை மீட்டு, மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

ram
ஆக 16, 2024 14:40

அப்படியே இந்த மூர்க்கர்களால் கொல்லப்பட்ட அப்பாவி ஹிந்து மக்கள் உயிரோரோடு வருவார்களா, இடஒதுக்கீடு என்று சொல்லி, ஹிந்து மக்களை கொல்வதுதான் இவன்கள் நோக்கம். கடவுள் ஒரு நாள் உங்களை இதற்கு தண்டிப்பார்.


UTHAYA KUMAR
ஆக 16, 2024 10:59

செத்தவங்கள உயிரோடு கொண்டுவர முடிமா?


B RAJARATHINAM
ஆக 16, 2024 10:15

மணிப்பூரில் நடந்தது மலைவாழ் குடிமக்களுக்கும் கிறித்தவ வெறியர்களுக்கும் நடந்தது.இது போல இந்துக்களை தாக்குதல் அல்ல


B RAJARATHINAM
ஆக 16, 2024 10:11

உலகெங்கும் இருப்பவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் மட்டும்தான்.வேறு மதத்தினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை.நடந்த குண்டு வெடிப்புகளை கணக்கில் எடுங்கள்.


B RAJARATHINAM
ஆக 16, 2024 10:08

இதே போல் இந்தியாவில் நடந்திருந்தால் அரசியல் கட்சிகள் ஆகா சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்துவிட்டது.ஆநியாயம் அக்கிரமம் என்று கூச்சலிட்டுஇருப்பர்.அங்கே நம் இந்துக்கள் கொன்ற இஸ்லாமியர்கள் மிருகத்துக்கு சமமானவர்கள்.நாம் எவ்வளவு தான் நன்மை செய்தாலும் அவர்கள் அதை நினைக்க மாட்டார்கள்.மத வெறியர்கள்


VENKATESAN
ஆக 16, 2024 09:31

Really great people ?


sai venkatesh
ஆக 15, 2024 20:41

Big drama and lie


Ramani Venkatraman
ஆக 15, 2024 18:45

ஆஹா..என்னே நேர்மை...என்னே ஒரு முட்டு... கற்பழிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட பெண்களும் உயிரிழந்த இந்துக்களும் யார் வீட்டு சொத்தாம்...செய்யறது அட்டூழியம்...அதுக்கு இப்படி ஒரு வெளிப்பூச்சு...கேவலம்.


Mohamed Raffi
ஆக 16, 2024 09:16

மணிபுரில் நடந்த கலவரத்தில் எத்தனை பெண்கள் கற்பழிக்க பட்டார்கள் அதற்கு?


பெரிய ராசு
ஆக 17, 2024 21:47

நீ எல்லாம் ஒரு காட்டு மிராண்டி எதுக்கு எது பதில் ..இந்திய தேசம் வெகுண்டு எழும் அன்று மூர்க்க கும்பலை துவைத்து தொங்கபோடுவர் ...அன்று ஹிந்துஸ்தான் நிம்மதி பெருமூச்சு விடும் , ஜெய் ஹிந்த


KRISHNAN R
ஆக 15, 2024 17:50

இது புதுசா இருக்கு


Anu Rajkumar
ஆக 15, 2024 17:14

உலகம் காரி துப்பிய பின் புத்தி வந்தது இவர்களுக்குஇவனுங்க விட்டு வைக்காதது பெண்களின் உள்ளாடையும் மோசமான பிறவிகள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை