உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐநாவில் நிரந்தர இடம்: இந்தியாவிற்கு எலான் மஸ்க் ஆதரவு: அமெரிக்க நிலை என்ன?

ஐநாவில் நிரந்தர இடம்: இந்தியாவிற்கு எலான் மஸ்க் ஆதரவு: அமெரிக்க நிலை என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஐ.நா.,வில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், ஐ.நா., பாதுகாப்பு சபை உள்ளிட்ட ஐ.நா., அமைப்புகளை சீர்திருத்தம் செய்வதற்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா கூறியுள்ளது.

இந்தியா முயற்சி

15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா., பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. எஞ்சிய 10 இடங்கள், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் நிரப்பப்படுகிறது. ஐ.நா., பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம் பெறுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது.

அபத்தம்

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛ ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அனைத்து தகுதிகளும் இந்தியாவிற்கு உள்ளது. இந்தியாவிற்கு பாதுகாப்பு கவுன்சிலில் இடம் அளிக்காதது அபத்தமானது. அதிகப்படியான அதிகாரம் உள்ளவர்கள் அதை விட்டுவிட விரும்பவில்லை'' எனக்கூறியிருந்தார்.

ஆதரவு

இந்நிலையில், எலான் மஸ்க்கின் கருத்து தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியதாவது: ஐ.நா., பொதுச் சபை குறித்து அதிபர் ஜோ பைடன் பேசும் போது சீர்திருத்தம் பற்றிப் பேசி உள்ளார். நாம் வாழும் 21ம் நூற்றாண்டை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்புச் சபை உள்ளிட்ட ஐ.நா., அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய நாங்கள் நிச்சயம் ஆதரவு தெரிவிப்போம். அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது தெரிவிக்க முடியாது. ஆனால், நிச்சயம் சீர்திருத்தம் தேவை என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஏப் 19, 2024 06:04

மாமா செய்துவிட்டுப்போன கெடுதலை சரி செய்ய அரை நூற்றாண்டுக்கு மேல் இந்தியா வளரும் ஏழை நாடாக இருந்தது இன்னும் கூட ஐரோப்பிய நாடுகள் வின்சி என்ற ஒரு பிரதிநிதியை அனுப்பு ஆளத்துடிக்கிறார்கள் காமன் வெல்த் என்ற பெயரில் இன்னும் அரை நூற்றாண்டுக்கு பிரிட்டிஷ் இராஜாவுக்கு பல்லாயிரம் கோடிகள் கப்பம் கட்ட துடிக்கிறார்கள் மோடி ஜெயித்தவுடன் அதைத்தான் முதலில் கைவைப்பார் என்று சொல்லப்படுகிறது


R Kay
ஏப் 19, 2024 01:05

இனி எல்லாமே தானாக கிடைக்கும் மக்கள் மட்டும் வாயால் வடை சுடுவதை விட்டு தங்கள் பங்கிற்கு இலவசங்களுக்கு, போதை வஸ்துக்களுக்கு அடிமையாகாமல் சோம்பலை விடுத்து ஆக்கபூர்வமாய் தத்தம் கடமைகளை பணிகளை sincere-ஆக செய்தால், இந்தியா கூடிய விரைவில் வல்லரசாகும்


முருகன்
ஏப் 18, 2024 18:14

எலான் மாஸ்க் எந்த நாட்டு அதிபர் ?அவருக்கு இதில் என்ன ஆதாயம் கிடைக்கப்போகிறது


Srinivasan
ஏப் 18, 2024 20:21

he is a great influencer, there must be some background work on


saravan
ஏப் 18, 2024 18:04

நேரத்துக்கு மூன்று சப்பாத்தி மட்டும் கொடுங்க, தொட்டுக்க கொஞ்சம் டால் எப்படி சர்க்கரை உயருத்தின்னு பார்க்கலாமே இரண்டு தொடப்பக்கட்டை அதிகம் கொடுக்கவும் அறையை சுத்தமாக வைத்திருக்க உதவும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை