உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 3 மனைவிகள், 11 குழந்தைகளுக்காக... ரூ.295 கோடியில் பண்ணை பங்களா வாங்கிய எலான் மஸ்க்

3 மனைவிகள், 11 குழந்தைகளுக்காக... ரூ.295 கோடியில் பண்ணை பங்களா வாங்கிய எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெக்ஸாஸ்: தனது குழந்தைகள், மனைவிகளுக்காக பங்களாவுடன் கூடிய பண்ணையை உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க். இவர் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார் .இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள் உள்ளனர். முதல் ஜஸ்டின் வில்சனுக்கு 5 குழந்தைகளும், 2வது மனைவி க்ரீம்ஸ்க்கு 3 குழந்தைகளும், 3வது மனைவி ஷிவோன் ஷில்லிஸ்-க்கு 3 குழந்தைகளும் உள்ளனர். இதில், முதல் 2 மனைவிகளை விட்டு பிரிந்து, 3வது மனைவியுடன் ஷிவோனுடன் தற்போது குடும்பம் நடத்தி வருகிறார். ஷிவோன் ஷில்லிஸ், மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளுடன் சேர்ந்து வாழும் வகையில், டெக்ஸாஸில் 14,400 சதுர அடியில் ரூ.295 கோடி மதிப்பில் பண்ணையை வாங்கியுள்ளார். 6 படுக்கையறைகளைக் கொண்ட பிரமாண்ட வீடும் அதில் அடங்கியுள்ளது. இந்த சொத்து வாங்கியதை ரகசியமாக வைத்திருக்கும் மஸ்க், விற்பனையாளர்கள் வெளியே சொல்லக் கூடாது என்று ஒப்பந்தத்தையும் போட்டுக் கொண்டதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சொத்துக்களை தனக்கு விற்றவர்களுக்கு 20 முதல் 70 சதவீதம் வரையில் கூடுதலாகவும் அவர் பணத்தை கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தனது குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்கவே, மஸ்க் இந்த வீட்டை வாங்கியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Raj S
அக் 31, 2024 00:01

ஆறு படுக்கையறை ஆனால் மனைவி மூன்று... இன்னும் மீதி கூடியசீக்கிரம் வருதுனு சொல்றமாதிரி இருக்கு ஹா ஹா ஹா... நம்ம கட்டுமரம் ட்ரைனிங் போல


பாலா
அக் 30, 2024 21:55

240 பில்லியன் உள்ளவனுக்கு 3 ஆனால் திராவிடியன் திருட்டு ரயிலுக்கு முடிவிலி ?


Suppan
அக் 30, 2024 21:22

அவரு அரசியல்ல அவ்வளவும் சம்பாதிச்சாரு மனைவி, துணைவி, இணைவிக்களையும் கூட வச்சுக்கிட்டே . அவரும் மச்சக்காரர்தான்


Tetra
அக் 30, 2024 21:20

பழைய மனைவிகளின் தற்போதைய கொண்டவர்களுக்கும் இடம் உண்டா?


vijay
அக் 30, 2024 21:01

மூணு மனைவிங்க வேறு யாரோ, ஏதோ நினைவில் வருதே. இவரு பல தொழில்கள் செஞ்சு சம்பாதித்து வருகிறார்......


Amruta Putran
அக் 30, 2024 20:51

But living with one wife, not 3 wives same time


Ramesh Sargam
அக் 30, 2024 20:34

மஸ்க் ... விசித்திரமான மனிதர். காரும் தயாரிப்பார். குழந்தைகளையும் பெற்றெடுப்பார்... ஒரு சிலருக்கு மச்சம் சரியான இடத்தில் அமைந்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.


நிக்கோல்தாம்சன்
அக் 30, 2024 20:24

மஸ்க்,பெண்களை பெண்களா நடத்துங்க , பெண்கள் குழந்தை பெரும் மெஷின் இல்லை...


பாலா
அக் 30, 2024 19:06

11 கொயந்தங்க! அண்ணாத்த...நிறைய பொழுதுபோக்கு விஷயங்கள் இந்த உலகத்துல இருக்கு. உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்ல.பாத்து சூதானமா நடந்துக்குங்க


தாமரை மலர்கிறது
அக் 30, 2024 18:55

இதைவிட பெரிய வீட்டை கட்டி ஏற்கனவே அம்பானி தனது கௌரவத்தை நிலைநாட்டி உள்ளார். அதானி இவரை விட பெரிய வீடு அமெரிக்காவிலேயே வாங்கி, இந்தியாவின் கௌரவத்தை காப்பாற்றுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை