உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருக்கமான நண்பர் எலான் மஸ்க். இவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரித்து இவர் தீவிர பிரசாரம் செய்தார்.டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன.மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். அவரின் பதவிக்காலம் மே மாத இறுதியில் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே மஸ்க் இந்த பதவியில் இருந்து விலகுவார் என டிரம்ப் தன் அமைச்சர்களிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தன் நிறுவனப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தவதற்காக மஸ்க் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raj
ஏப் 03, 2025 06:44

அமெரிக்காவிற்கு எதிர் வினை தான் தமிழ்நாடு அரசு, அமெரிக்கா 10 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி உள்ளார்கள், விடியல் ஆட்சி 10 லட்சம் கோடி ரூபாயை கடனாக்கி உள்ளார்கள். என்ன ஒரு நிர்வாகத்திறமை.


,srin
ஏப் 03, 2025 16:13

திராவிட மாடல்


முக்கிய வீடியோ