மேலும் செய்திகள்
20 துணை துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
08-Nov-2025
ஹெல்சின்கி:: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் உள்ள துாதரகங்களை மூடுவதாக பின்லாந்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பின்லாந்து, மாறி வரும் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அந்நாட்டுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரங்களில் முக்கியத்துவம் தரும் நாடுகளுடன் மட்டுமே நட்புறவை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. எனவே, வர்த்தகம், பொருளாதார விவகாரங்களில் தொடர்பு இல்லாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் உள்ள தன் துாதரகங்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் மூடப்போவதாக அறிவித்துள்ளது. துாதரகங்களை மூடுவது என்ற முடிவு இரு நாட்டு உறவுகளை முறித்துக் கொள்வதாகாது. மாறாக உலகளாவிய நாடுகளுடனான உறவை மறு சீரமைப்பதாகும் என பின்லாந்து விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பின்லாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளுடன் குறைந்த வணிக மற்றும் பொருளாதார உறவுகளையே பின்லாந்து பேணி வருகிறது. வலுவான பொருளாதார மதிப்பு கொண்ட பிராந்தியங்களில் கவனம் செலுத்த விரும்புகிறோம். அதற்காகவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
08-Nov-2025