மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
2 hour(s) ago | 1
கொழும்பு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, முதன் முறையாக நம் அண்டை நாடான இலங்கையின் திரிகோணமலையில் நேற்று நடந்தது. தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் நம் ஊரை போன்று, பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் தமிழகத்தின் சிவகங்கையை பூர்வீகமாக கொண்ட செந்தில் தொண்டைமான், தற்போது திரிகோணமலை மாகாண கவர்னராக உள்ளார். இவர், தமிழகத்தை போல இலங்கையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.இதன்படி, நேற்று திரிகோணமலையின் சம்பூரில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. கவர்னர் செந்தில் தொண்டைமான் மற்றும் மலேஷிய எம்.பி., டத்தோ ஸ்ரீ முருகன் சரவணன், திரைப்பட நடிகர் நந்தா உள்ளிட்டோர் பங்கேற்றுஜல்லிக்கட்டு போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.ஜல்லிக்கட்டு போட்டியில், 200க்கும் மேற்பட்ட காளைகளும், 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை பார்க்க நுாற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.
2 hour(s) ago | 1