ஐ.நா.,வில் முதல்முறையாக ஹிந்தியில் புத்தாண்டு வாழ்த்து
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: ஆங்கில புத்தாண்டையொட்டி முதல் முறையாக ஹிந்தி, உருது உள்ளிட்ட மொழிகளில் ஐ.நா., பொதுச் செயலர் ஆன்டனியோ குட்டரெஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின், 193 நாடுகள், ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ளன. ஐ.நா., பொதுச் செயலர், புத்தாண்டையொட்டி, 11 மொழிகளில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். ஐ.நா.வின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம், அரபு, சீனம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகியவற்றுடன் ஹிந்தி, உருது ஆகியவையும் தற்போது முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன. 'அழிவை விட வளர்ச்சி முக்கியம்' என்பதை வலியுறுத்தி ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் மோதல் நிலவும் பகுதிகளில் வாழ்கின்றனர். 12 கோடி பேர் போரினால் இடம்பெயர்ந்துள்ளனர். அழிவிற்காக முதலீடு செய்வதை நிறுத்திவிட்டு, வளர்ச்சிக்காக முதலீடு செய்யுங்கள்' என, குறிப்பிட்டுள்ளார்.