உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாட்டு பயணத்தால் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

வெளிநாட்டு பயணத்தால் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஜெர்மனி, பிரிட்டன் பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார வாகனச் சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ. 7,500 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதனால் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஜெர்மனி, பிரிட்டன் பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன.இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஈர்க்கப்பட்ட முதலீடுகள் வெறும் எண்ணிக்கை அல்ல. அவை வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது ஆட்சியில் உள்ள திமுகவிற்கு உத்வேகம் அளிக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 72 )

Karthik
செப் 06, 2025 20:25

ஏன் இந்த செய்தி washington லிருந்து எழுதப்பட்டுள்ளது?


Veluvenkatesh
செப் 06, 2025 19:17

அப்பா, அப்பப்பா.... சூப்பர் அப்பு. உங்க வெளி நாட்டு பயணம் வீண் போகல???? 15000 கோடியை வெள்ளையா ஆக்கிபுட்டிங்களே அப்பு? உண்மையிலேயே சூப்பரப்பு ????? கலைஞர் வாரிசுன்னா சும்மாவா?


Stalin
செப் 06, 2025 19:06

கருப்பு இனிமே வெள்ளை ஆகிடும்.


என்னத்த சொல்ல
செப் 06, 2025 18:34

செல்லாது... செல்லாது...


Anand
செப் 06, 2025 18:11

அசோக் லைலேண்டை தான் ஹிந்துஜா குரூப் நடத்துகிறது... அவிங்க தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதை ஈர்ப்பு என உருட்டுறாங்க..


vbs manian
செப் 06, 2025 16:55

டாடா மஹிந்திரா மற்றும் கம்பெனிகள் மின்சார கார்களை தயாரிக்கின்றன. இவற்றை ஊக்குவிக்காமல் வியட்நாமிலிருந்து vinfast என்ற கம்பெனி இருநூறு பேருக்கு வேலை கொடுத்து தொடங்கியுள்ளது. உள்நாட்டு நிறுவனங்களை ஏன் ஆதரிக்கவில்லை.


vbs manian
செப் 06, 2025 16:51

தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் எட்டு கோடி. முதலீடுகள் மூலம் பதினைந்தாயிரம் வேலை என்கின்றனர். கடலில் கரைத்த பெருங்காயம். இன்றைய உலகில் தொழில்கள் இயந்திரமயம். ஒரு ரோபோட் நூற்றுக்கணக்கான மனிதர்கள் செய்யும் வேலையை செயகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு ஆயிரக்கண க்கில் வேலைகளை கபளீகரம் செயகிறது. வெளிநாட்டு பயணம் தனிமனித வேலை வாய்ப்புகளை பெரிய அளவில் உருவாக்காது. வேலை புரட்சி நிகழ்வதை போன்ற பிரமை உருவாக்கப்படுகிறது.


manian
செப் 06, 2025 15:48

biggest hoax on TN public


N S
செப் 06, 2025 15:28

அப்பா சொன்னால் சரிதான். இப்படியும் இருக்கலாம் "ஜெர்மனி, பிரிட்டன் பயணம் மூலம் ரூ.15,516 கோடி கிடைத்துள்ளன"


கூத்தாடி வாக்கியம்
செப் 06, 2025 15:25

இங்க இருக்கிற கம்பனிக்கெல்லம் டேக்ஸ் போட்டு ஓடவிட்டு. புதுசா எதுக்கு புடிச்சிட்டு வர்ற. நீ வாங்கி வச்ச் நிலத்தில் சொன்ன விலைக்கு வெளிநாட்டு காரன்னஎ வித்துட்டு கல்லா கட்ட திட்டம் போடுற


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை