உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரசில்லா: பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாராவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரேசிலில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ அதிர்ச்சி தோல்வியடைந்தார். தேர்தலில் நடந்த முறைகேடு தான் தன்னுடைய தோல்விக்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய போல்சனாரோ, புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=50g3orbc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இதையடுத்து, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல், ஆட்சியை கவிழ்க்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போல்சனாரோ, அர்ஜென்டினாவுக்கு தப்பியோட முயற்சித்தார். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை போல்சனாரோ தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்தத் தீர்ப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், 'போல்சனாரோ சிறந்த மனிதர். இந்தத் தீர்ப்பு என்னை வருத்தமடையச் செய்துள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

உ.பி
செப் 12, 2025 23:09

நம்ம ஊருல சுப்ரீம் கோர்ட்டுனு ஒண்ணுதுக்கும் ப்ரயோஜனம் இல்லாம இருக்கு


சிட்டுக்குருவி
செப் 12, 2025 17:16

இந்தியாவில் சான்ஸே இல்லை .இந்தியாவின் அரசியல்வாதிகள் ஒரு தனித்துவ அதிகாரம் படைத்தவர்கள் . என்ன குற்றம்ஆனாலும் அவர்களுக்கென்ற ஒரு தனிமரியாதை உண்டு மக்களிடத்தில் ."டே இவன் நல்லாவே அடிக்கிறாண்டா "என்று மக்கள் பெருமைப்படுவார்கள் .


Nachiar
செப் 12, 2025 16:18

பிரேசில் நீதித்துறைக்கு ஒரு சல்யூட்


தியாகு
செப் 12, 2025 13:24

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை. ஹி... ஹி... ஹி... பிரேசில் அதிபருக்கு விவரம் பத்தல. நம்ம கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்திற்கோ குறுநில மன்னர்கள் போல இருக்கும் அமைச்சர்களுக்கோ ஒரு போன் போட்டிருந்தால் எங்குமே மாட்டிகொள்ளாதபடி தப்பிப்பது எப்படி என்று சொல்லி கொடுத்திருப்பார்கள்.


திருட்டு திராவிடன்
செப் 12, 2025 12:21

இங்குள்ள திருட்டு அயோக்கியர்களுக்கு எத்தனை வருடம் சிறை தண்டனை?


KOVAIKARAN
செப் 12, 2025 12:18

ஒருவேளை அவர் இந்தியாவிலிருந்திருந்தால், கபில் சிபில், அபிஷேக் சிங்கவி போன்ற இடைத்தரகர்களை வைத்து வாதாடி, வழக்கிலிருந்து விடுதலை பெற்றிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை