உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிறைக்கு மீண்டும் வந்தார் மாஜி துணை பிரதமர்

சிறைக்கு மீண்டும் வந்தார் மாஜி துணை பிரதமர்

காத்மாண்டு:நேபாளத்தில் அரங்கேறிய இளைஞர்கள் போராட்டத்தின்போது சிறையில் இருந்து தப்பிய முன்னாள் துணை பிரதமர் ரபி லாமிச்சேன், தன் பிறந்த நாள் பரிசாக மீண்டும் சிறைக்கு செல்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். நம் அண்டை நாடான நேபாளத்தில், சமீபத்தில் இளைஞர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இது, வன்முறையாக மாறியது. அப்போது நாடு முழுதும் சிறைகளில் இருந்து, 15,000 பேர் தப்பினர். அப்போது, சிறையில் இருந்த ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான ரபி லாமிச்சேனும் தப்பிச் சென்றார். இந்நிலையில், சமூக வலைதளத்தில், ரபி லாமிச்சேன் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்களுடன் உரையாடி வருகிறேன். முந்தைய ஆட்சியில், பழிவாங்கும் நோக்குடன் ஊழல் வழக்கில் என்னை சிறையில் தள்ளினர். தற்போது, நம் நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியே பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இனி அநீதி நடக்காது என்ற நம்பிக்கையுடன், மீண்டும் சிறைக்கு செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ