உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கை ஜெயிலுக்கு போனதும் ரத்த கொதிப்பு மருத்துவமனையில் மாஜி அதிபர்

இலங்கை ஜெயிலுக்கு போனதும் ரத்த கொதிப்பு மருத்துவமனையில் மாஜி அதிபர்

கொழும்பு,:நிதி முறைகேடு வழக்கில் இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 76, ரத்த அழுத்தம் அதிகரிப்பால் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நம் அண்டை நாடான இலங்கையின் அதிபராக 2022 முதல் 2024 வரை பதவி வகித்தவர் ரணில் விக்ரமசிங்கே. இவர் 2023ல் லண்டனில் நடந்த அவரது மனைவிக்கான பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடும்பத்துடன் விமானத்தில் சென்றார். அங்கு தங்கி சுற்றுப்பயணம் செய்தார். தனிப்பட்ட பயணமான இதற்கு அரசு பணத்தை செலவிட்டதாக, அவர் மீது அதிபர் அனுரா குமார திசநாயகே அரசு நிதி முறைகேடு வழக்கு பதிந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட விக்ரமசிங்கேவுக்கு, நீதிமன்றம் ஜாமின் மறுத்தது. வரும் 26ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், ரத்த அழுத்தம் அதிகரித்ததால், விக்ரமசிங்கே நேற்று சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !