உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விண்வெளி முதல் -செமிகண்டக்டர் வரை ஜோ பைடன் - மோடி விரிவான பேச்சு

விண்வெளி முதல் -செமிகண்டக்டர் வரை ஜோ பைடன் - மோடி விரிவான பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வில்மிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியை தன் இல்லத்துக்கு அழைத்து, அமெரிக்கா - இந்தியா உறவு குறித்து அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் உரையாடினார்.அப்போது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் முதல், விண்வெளி தொழில்நுட்பம் வரை இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.'குவாட்' அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக, டெலாவர் மாகாணத்தின், வில்மிங்டன் என்ற இடத்தில் உள்ள அதிபர் ஜோ பைடனின் கிரீன்வில் என்ற இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் பைடன், மோடியை கைபிடித்து இல்லத்திற்குள் அழைத்து சென்றார். இரு தலைவர்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாடினர்.'இந்தியா - அமெரிக்கா உறவை வலுப்படுத்துவது இந்த சந்திப்பின் மையமாக இருந்தது. இந்தோ - பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்' என, நம் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.உலக அரங்கில் இந்தியாகொரோனா பெருந்தொற்று காலத்தில் பிற நாடுகளுக்கு உதவியது முதல், உலகெங்கிலும் நிகழும் மோதல்களுக்கு தீர்வு காண முயலும் இந்தியாவின் முயற்சியை அதிபர் பைடன் பாராட்டினார்.பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் மற்றும் போரை முடிவுக்கு கொண்டு வரவும், உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகள் அளிப்பது குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்களை அதிபர் பைடன் வரவேற்றார்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில்ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்து, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்ற மோடியின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக பைடன் உறுதி அளித்தார்.செமிகண்டக்டர் ஆலைதேசிய பாதுகாப்பு, அடுத்த தலைமுறை தொலைதொடர்பு மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாடுகளுக்கான புதிய செமி கண்டக்டர் ஆலையை, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் இரு நாடுகளும் இணைந்து நிறுவுவதற்கான ஏற்பாட்டிற்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். விண்வெளி ஆய்வுஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து, 2025ல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இஸ்ரோ வீரர்கள் மேற்கொள்ள இருக்கும் ஆய்வு குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. எம்க்யூ - 9பி ட்ரோன்கள்நம் நாட்டின் முப்படைகளுக்கு, எம்க்யூ - 9பி ரக ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை வழங்க, கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா ஒப்புதல் அளித்தது. 33,000 கோடி ரூபாய்க்கு 31 ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம், இந்தியாவின் ராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் என, அதிபர் பைடன் மகிழ்ச்சி தெரிவித்தார்.பசுமை எரிசக்திபாதுகாப்பான, பசுமை எரிசக்தி வினியோகத் தொடர்களை உருவாக்குவதற்காக, இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒப்பந்தங்களை இரு தலைவர்களும் பாராட்டினர்.

எம்க்யூ - 9பி ட்ரோன்களின் திறன்!

 பயணியர் விமானங்களை விட அதிக உயரத்தில் பறக்கக்கூடியது தொடர்ச்சியாக 2,000 கி.மீ., வரை எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து 35 மணி நேரம் பறக்கக்கூடியது. நிலத்தில் இருந்து 50,000 அடி உயரத்தில், அதிகபட்சமாக மணிக்கு 442 கி.மீ., வேகத்தில் பறக்கும் நிலத்தில் இருந்து 800 அடி உயரத்தில் பறந்தாலும் இதை கண்டுபிடிப்பது மிக கடினம் சத்தமின்றி இயங்கக்கூடியது எவ்விதமான தட்ப வெப்பநிலையிலும் இயக்க முடியும் வான்வழி தாக்குதல் மட்டுமின்றி, வானில் இருந்து நிலத்தை நோக்கியும் தாக்கக்கூடியது 1,700 கிலோ எடை வரை தாக்கக்கூடிய நான்கு ஏவுணைகள் மற்றும் 450 கிலோ வெடி பொருட்கள்.

கடத்தப்பட்ட 297 கலை பொருட்கள்

திருப்பி அளிக்கிறது அமெரிக்காஇந்தியாவில் இருந்து பாரம்பரியம் மிக்க கலைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், இதுவரை கடத்தப்பட்ட பொருட்களை திருப்பி ஒப்படைப்பது தொடர்பாகவும், இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் விளைவாக, நம் நாட்டில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 297 கலை பொருட்களை திருப்பி அளிப்பதாக பிரதமர் மோடியிடம், அதிபர் பைடன் நேற்று தெரிவித்தார். இதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

வெள்ளி ரயில் பரிசு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட ரயில் சிற்பத்தை, பிரதமர் மோடி பரிசாக அளித்தார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கைவினை கலைஞரால் கைகளால் செய்யப்பட்ட இந்த வெள்ளி ரயில், நீராவி இன்ஜின் காலத்தை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பக்கவாட்டில், 'இந்தியன் ரயில்வே' என்றும், 'டில்லி - டெலாவர்' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு, ஜம்மு - காஷ்மீரில் நெய்யப்பட்ட உலக பிரசித்த பெற்ற பாஷ்மினா சால்வையை பிரதமர் பரிசளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 23, 2024 08:05

ஆச்சரியம் ..... ஒரே நாட்டில் இருந்து ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அந்த வல்லரசு நாட்டுக்குப் போய் பேசி பிரிவினை, பொய்ப்பிரச்சாரம், தேசவிரோத கொள்கைகளைப் பேசித்திரிகிறார் ..... அதே நாட்டில் இருந்து பிரதமர் அதே வல்லரசு நாட்டுக்குப் போய் ராஜதந்திர கூட்டணியை வலுப்படுத்துகிறார் .... நாட்டில் தொழில்வளம் பெருக உழைக்கிறார் ..... எதிரிகள் பயனற்ற முயற்சிகள் என்கிறார்கள் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 23, 2024 08:05

ஒரே நாட்டில் இருந்து ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அந்த வல்லரசு நாட்டுக்குப் போய் பேசி பிரிவினை, பொய்ப்பிரச்சாரம், தேசவிரோத கொள்கைகளைப் பேசித்திரிகிறார் ..... அதே நாட்டில் இருந்து பிரதமர் அதே வல்லரசு நாட்டுக்குப் போய் ராஜதந்திர கூட்டணியை வலுப்படுத்துகிறார் .... நாட்டில் தொழில்வளம் பெருக உழைக்கிறார் ..... எதிரிகள் பயனற்ற முயற்சிகள் என்கிறார்கள் ....


Appan
செப் 23, 2024 07:11

ஒரு காலத்தில் சீனா என்றால் காப்பி அடிக்கும் நாடு என்னு ஏளனம் செய்வார்கள்..இப்போ உலகில் எல்லா துறைகளின் முன்னணி உள்ள நாடு சீனா .முன்னணியில் இருந்த அமெரிக்க இப்போ 5G , AI , ரயில்வே, விண்வெளி , எலக்ட்ரானிக் ..இப்படி எல்லா துறைகளும் பின் தங்கி உள்ளது . இந்தியாவின் வளர்ச்சி என்றால் மக்கள் தொகை தான் .பிஜேபி இதை கட்டுக்குள் கொண்டு வந்து பொருளாதார வளற்சியை பாராமல் மதம், ஒரு நாடு ஒரு தேர்தல் , இந்தி என்று நாட்டிற்கு ஒவ்வாதத்தை செய்து நேரத்தை வீணாக்கிறது பொருளாதரம் வளர்ந்து நாட்டில் சூபிட்சம் நிலவினால் இந்த மொழி, மதம் போன்ற பிரச்சனைகள் இருக்காது ..


subramanian
செப் 23, 2024 09:22

முகமூடி அணிந்த நீ நினைப்பது நடக்காது.


Hari
செப் 23, 2024 14:49

We live in India... Not like you wandering in London


SUBBU,MADURAI
செப் 23, 2024 05:18

We are citizens of a country where hundreds of languages exist, yet we move forward as one PM Modi. A few days ago, at the same place, Rahul Gandhi was propagating that Indian is not one. The difference!


தாமரை மலர்கிறது
செப் 23, 2024 03:54

ரசியாவை அடக்க எப்படி உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்கிறதோ, அதே மாதிரி சீனாவை அடக்க இந்தியாவிற்கு அமெரிக்கா உதவி செய்யும். எதிர்காலத்தில், லடாக், அருணாச்சலடப்ரதேஷ், மணிப்பூர், மேகாலயா, அசாம் போன்ற பகுதிகளை சீனா எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது. இந்தியாவில் நூற்றிநாற்பது கோடி மக்கள் உள்ளனர். அதனால் பத்து லட்சத்திற்கும் அதிகமான ராணுவவீரர்கள் உள்ளார்கள். மேலும் அணுகுண்டுகள் உள்ளது. அதனால் சீனா இந்தியாவை அணுகுண்டு யுத்தம் செய்ய தயங்கும். இந்தியா சீனா இடையே போர் துவங்கினால், உலகநாடுகள் இந்தியாவிற்கு உதவி புரியும். இந்தியாவால் சீனா பூனைக்கு மணி கட்டி, இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் கொடி கட்ட முடியும். போரில் ஈடுபடாத சீனாவிற்கு பத்தாயிரம் வீரர்கள் காயமடைந்தால் கூட, தோல்வியை ஒப்புக்கொள்ளும். போரில் சீனாவை வெற்றிகொள்வதன் மூலம், இந்தியா அதன் பெருமையை நிலைநாட்ட முடியும்.


subramanian
செப் 23, 2024 09:25

இதை போன்ற கருத்துக்கள் எழுத வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை