உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹெச்1பி விசா… இந்திய நிறுவனங்களுக்கு கடிவாளம்… அமெரிக்காவுக்கு தாராளம்

ஹெச்1பி விசா… இந்திய நிறுவனங்களுக்கு கடிவாளம்… அமெரிக்காவுக்கு தாராளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் வேலைவாய்ப்புக்கான ஹெச்1பி விசா, கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, 2025ம் ஆண்டில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான தொழில் வல்லுனர்களை சிறப்பு விசா மூலம் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். முன்பு, இந்த விசாவுக்கு அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றால் போதும் என்ற நடைமுறை இருந்தது. ஆயிரம் டாலர்களுக்கு குறைவான கட்டணத்தை மட்டும் அரசுக்கு செலுத்தி விட்டால் போதும். இதன் மூலம், இந்திய தொழில் நுட்ப வல்லுநர்கள் ஏராளமான பேர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர்.ஆனால், கடந்த செப்., 1ம் தேதி முதல் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்கள் தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு, கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்தாண்டு குறைந்த அளவிலான ஹெச்1பி விசாக்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை (NFAP) வெளியிட்ட அறிக்கையில்; இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட முதல் 7 ஐடி நிறுவனங்களுக்கு 2025ம் ஆண்டில் புதிய வேலைவாய்ப்புக்கான 4,573 ஹெச்1பி விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது 2015ஐ விட 70 சதவீதமும்,2024ம் ஆண்டை விட37 சதவீதமும் குறைவாகும்.தொடர்ச்சியாக அதிகளவில் ஹெச்1பி விசா ஒப்புதல்களை பெறும் முதல் 5 இடங்களில் உள்ள ஒரே இந்திய ஐடி நிறுவனம் டிசிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், டிசிஎஸின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு 2024ல் 4 சதவீதத்தில் இருந்து 2025ல் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தாண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்தின் பணி நீட்டிப்புக்கான 5,293 ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.2025ம் ஆண்டு நிதியாண்டில் புதிய வேலைவாய்ப்புக்காக அதிக ஹெச்1பி விசா விண்ணப்பங்களைப் பெற்ற முதல் 25 நிறுவனங்களில் 3 இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன.செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்திய ஐடி நிறுவனங்கள் குறைவான ஹெச்1பி விசாக்களை மட்டுமே பெறுகின்றன. புதிய வேலைவாய்ப்புக்கான ஹெச்1பி விசாக்கான அனுமதியை பெற்ற முதல் நான்கு இடங்களையும் அமெரிக்க நிறுவனங்களே பிடித்துள்ளன. அமேசான் (4,644), மெட்டா (1,555), மைக்ரோசாப்ட் (1,394), கூகுள் (1,050) ஆகியவை உள்ளன.பணி நீட்டிப்புக்கான ஹெச்1பி விசாக்களை அதிகம் பெற்றதில் அமேசான் (14,532) முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து, டிசிஎஸ் (5,293), மைக்ரோசாப்ட் (4,863), மெட்டா (4,740), ஆப்பிள்(4,610) மற்றும் கூகுள் (4,509) உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை