உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் தளபதியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல் தகவல்

ஹமாஸ் தளபதியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல் தகவல்

டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ தளபதியாக செயல்பட்ட முகமது டெயிப் உயிரிழந்தார். இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. சமரச முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் மறுபக்கம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். நேற்று( ஜூலை 31) ஈரான் தலைநகர் தெஹ்ரானில், அந்த அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. அதில், அவர் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த அமைப்பின் ராணுவ தளபதியாக இருந்த முகமது டெயிப் என்பவர், கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி, இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதனை தற்போது, இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். இவர், கடந்த அக்., 7 ல் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழக்க காரணமான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர் ஆவார். இவரை, பல முறை கொல்ல இஸ்ரேலிய படைகள் முயற்சித்தன. அதில் தப்பி வந்த நிலையில், உளவுத்துறையினர் அளித்த தகவல் அடிப்படையில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்கு தற்போது முகமது டெயிப் உயிரிழந்துள்ளார். இது பாலஸ்தீனிய அமைப்புக்கும், அந்த அமைப்பை ஆதரிக்கும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

K.Muthuraj
ஆக 01, 2024 21:04

உண்மையில் ஹனியே ஹமாஸுக்கு ஹமாஸ் தலைவரான யாஹியா சின்வருக்கு இடைஞ்சலாகவே இருந்து வந்தார். இவரின் இறப்பின் பின்னணியில் ஹமாஸின் பங்கே அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.


K.Muthuraj
ஆக 01, 2024 21:00

இன்று காலையில் ஹனியே இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டார் என்று கூறினார்கள். ஆனால் இஸ்ரேல் ஒன்றும் சொல்லவில்லை. ஈரானுக்குள் தாக்குதல் நடத்துவது எளிதல்ல. இப்பொழுது ஹனியே தன்னிடம் ரகசியமாய் இருந்த வெடிபொருட்கள் தானாகவே வெடித்து இறந்தார் என்று செய்தி வந்துள்ளது.


Vijay D Ratnam
ஆக 01, 2024 20:33

அடிபட்டு அடிபட்டு சாவ சாவ அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கும்.


தாமரை மலர்கிறது
ஆக 01, 2024 20:01

பயங்கரவாதிகளை ஒழித்துவருவதால், இஸ்ரேலை போர் மேகம் சூழ்ந்துள்ளது. உலகநாடுகள் உதவ வேண்டும். இந்தியா பத்தாயிரம் கோடி ரூபாயை இஸ்ரேலுக்கு கொடுத்து முதல் கட்ட உதவி செய்யவேண்டும்.


K.Muthuraj
ஆக 01, 2024 20:58

உன் பையில் இருந்து கொடுப்பா


Jagan (Proud Sangi)
ஆக 01, 2024 18:39

முதலில் இது போன்ற ஜந்துக்களுக்கு உதவும் ஈரான் ஆட்சி அதிகார தலைமை அழிக்க பட வேண்டும்


Jagan (Proud Sangi)
ஆக 01, 2024 18:36

இசுரேல் மணி மகுடத்தில் இன்னொரு வைரக்கல். வாழ்க இசுரேல், இந்தியாவின் நல்ல நண்பன்


Jysenn
ஆக 01, 2024 17:56

வெற்றி மேல் வெற்றி .


mei
ஆக 01, 2024 16:44

புழு மாதிரி பெத்து பெத்து போடுறாங்களே


mei
ஆக 01, 2024 16:44

ஆயிரம் புழுக்கள் சாகும், பொறக்கும்


Anand
ஆக 01, 2024 16:30

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் தாக்குதலில் மூர்க்க தீவிரவாதிகளின் தலைவர்கள் பலர் கொல்லப்படும் செய்திகளை கேட்கும் இங்குள்ள கூட்டுக்களவாணி கூட்டணி நிம்மதியில்லாமல் கடும் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை