உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்

பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்

ஜெருசலம்: காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டு பிணைக்கைதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) முன்வர வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். கடந்த இரண்டரைக்கு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், 1200 பேரை சுட்டுக் கொன்றதுடன், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். பிணைக்கைதிகளில் பலர் இறந்து விட்ட நிலையில், சிலர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ளனர். பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதனிடையே, இஸ்ரேலை அடிபணிய வைக்கும் விதமாக, தங்களது பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதி ஒருவரின் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் அந்த நபர், மண்வெட்டியுடன் தனக்கு தானே புதைக்குழியை வெட்டிக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக்கைதிகளுக்கு உதவ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தலையிட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். காசாவின் பிராந்திய ஜூலியன் லெரிசனிடம் பேசிய அவர், 'காசாவில் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவ சேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கேட்டுக் கொண்டார். இதனிடையே, சிறைபிடிக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை சந்திக்க ஹமாஸ் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நடுநிலை குமார்
ஆக 04, 2025 19:06

உங்க ஆளுங்களுக்கு வலிச்சா தெரியுதில்லே. பாலஸ்தீனர்களுக்கு நாடும் குடுக்க மாட்டீங்க. அவங்க போரிட்டால் தீவிரவாதிகள்னு சொல்லுவீங்க. அதுக்கு அமெரிக்காவும் துணை போகும். இந்தியாவும் ஓட்டெடுப்பில் பங்கெடுக்காது. கடைசியில் இது போருக்கான நேரமில்லைன்னு அறிக்கை உடும். பாலஸ்தீனத்துக்கும் ஆதரவு குடுத்து குழப்பும்.


V.Mohan
ஆக 04, 2025 15:31

உங்க மக்களை அழிக்க 6000 ராக்கெட்களை ஒரே நேரத்தில் ஏவிய ஹமாஸை அழிக்க நீங்களும் போரை ஆரம்பித்து விட்டீங்க உங்களுக்கு நல்லாவே தெரியும் , கொலைகார ஹமாஸின் திட்டம் தங்களது அப்பாவி ஜனங்கள் எவ்வளவு பேர் செத்தாலும் அழிந்தாலும் பரவாயில்லை இஸ்ரேலை ஒழிக்க வேண்டும் என்பது தான். இந்த நிலையில் உங்க ஆளுங்களை பிடித்து வைத்து சித்ரவதை பண்றாங்க. சகிப்புத்தன்மையும் மனிதநேயமும் அறவே இல்லாத மதம் பிடித்து யூதர்களை அடியோடு அழிக்க கங்கணம் கட்டியுள்ள ஹமாஸிடம் யாராலும் பேச முடியாது. காட்டுமிராண்டித்தனம் கொண்ட ஹமாஸ் தங்கள் குழந்தைகள் பெண்கள் பலரும் பட்டினியால் சாகும் நேரத்திலும் மனித நேயம் இல்லாத அழிவு எண்ணம் கொண்ட கொலைகாரர்களாக இருப்பது உலக மக்களின் துரதிருஷ்டம்


Rathna
ஆக 04, 2025 12:19

இஸ்ரேல் பழிக்கு பழி வாங்குவது முன் வினை செய்த பயன் அனுபவிக்க தான் வேண்டும். ஹமாஸ் என்பது மிக கொடிய இயக்கம். காஷ்மீரிய சிந்தூர் கொலைக்கு பிளான் போட்டு கொடுத்த இயக்கம்.


Columbus
ஆக 04, 2025 11:13

This war was started by Hamas by killing and kidnapping Israeli citizens. So only Hamas responsible for everything.


Prem
ஆக 04, 2025 10:13

59000 பேரை நீங்கள் கொன்ற கணக்கு?


N Sasikumar Yadhav
ஆக 04, 2025 12:00

பயங்கரவாதிகளை கொல்லத்தான் வேண்டும் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஷ் மாதிரி பிரியாணி போடக்கூடாது


ராமகிருஷ்ணன்
ஆக 04, 2025 12:57

எத்தனை பேரை கொன்றும் ஹமாஸ்க்கு திமிர் குறையவில்லையே, இன்னும் மத வெறியுடன் தானே இருக்காங்க. இஸ்ரேலின் பணி தொடரட்டும்.


Rathna
ஆக 04, 2025 16:47

நம்ம பார்முலா - பிரியாணி + சிக்கென் + வாரம் ஒரு முறை இனிப்பு + வருஷம் இரண்டு முறை பரோல் + சிறையில் இருந்தே குடும்பத்தை பெருக்குவது அவங்க பார்முலா இது தான் 1000 = 59000


வண்டு முருகன்
ஆக 04, 2025 10:08

இந்த போட்டோவை பார்க்கும் போது எனக்கு இரண்டாம் உலகப்போர் கான்சன்ட்ரேஷன் கேம்ப் இன் நடந்த கொடூரம் தான் ஞாபகம் வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை