உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அனுமன் பற்றி டிரம்ப் கட்சி பிரமுகர் சர்ச்சை பதிவு: அமெரிக்க ஹிந்து பவுண்டேஷன் கண்டனம்!

அனுமன் பற்றி டிரம்ப் கட்சி பிரமுகர் சர்ச்சை பதிவு: அமெரிக்க ஹிந்து பவுண்டேஷன் கண்டனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அனுமன் பற்றி டிரம்பின் அமெரிக்க குடியரசுக் கட்சி பிரமுகர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் டங்கன். இவர் டெக்சாஸ் மாகாண குடியரசுக் கட்சியின் தலைவராக இருக்கிறார். இவர் தமது எக்ஸ் வலைதளத்தில் அனுமன் பற்றி ஒரு சர்ச்சை பதிவை வெளியிட்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xiqzx0xo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், 'டெக்சாஸில் ஒரு பொய்யான ஹிந்து கடவுள் சிலையை ஏன் அனுமதிக்கிறோம். இது ஒரு கிறிஸ்துவ நாடு' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் பைபிளில் இடம்பெற்றுள்ள சில வாசகங்களையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அலெக்சாண்டர் டங்கன் குறிப்பிட்டுள்ளதாவது;என்னை தவிர வேறு கடவுள் உனக்கு இருக்கக்கூடாது. வானத்திலோ, பூமியிலோ, கடலிலோ உள்ள எந்த ஒரு சிலையையோ அல்லது உருவத்தையோ நீ உனக்கு உருவாக்கிக் கொள்ளக்கூடாது. கடவுள் பற்றிய உண்மையை அவர்கள் பொய்யாக மாற்றிவிட்டார்கள். கடவுளின் உண்மையான சத்தியத்தை மறைத்து, படைத்தவரை வணங்குவதற்கு பதிலாக, அவர் உருவாக்கிய உலகத்தையும், பொருட்களையும் வணங்க ஆரம்பித்தார்கள். கடவுள் என்றைக்கும் புகழப்படுவதற்கு உரியவர்.இவ்வாறு அலெக்சாண்டர் டங்கன் தமது பதிவில் கூறியுள்ளார். எக்ஸ் வலை தள பதிவோடு, கோயிலில் உள்ள அனுமன் சிலை வீடியோவையும் அவர் இணைத்துள்ளார். அலெக்சாண்டர் டங்கனின் கருத்துக்கு அமெரிக்க ஹிந்து பவுண்டேஷன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் ஒன்றையும் டெக்சாஸில் உள்ள குடியரசுக் கட்சி அலுவலகத்துக்கு எக்ஸ் வலைதள பதிவின் மூலம் அனுப்பி உள்ளது. அலெக்சாண்டர் டங்கன் விமர்சித்துள்ள அனுமன் சிலை டெக்சாஸ் மாகாணம், சுகர்லேண்ட் நகரத்தில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில் உள்ளது. 90 அடி உயரம் கொண்டது. கடந்தாண்டு திறக்கப்பட்ட இந்த சிலை, வட அமெரிக்காவின் மிக உயரமான கடவுள் சிலைகளில் ஒன்று. மேலும், அமெரிக்காவின் ஒற்றுமை சிலை என்றும், நாட்டின் 3வது உயரமான சிலை என்றும் போற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Haja Kuthubdeen
செப் 23, 2025 20:38

அமெரிக்காவும் சரி..ஐரோப்பாவும் சரி முழுக்க முழுக்க கிருத்தவ நாடுகள்.மற்ற மதத்தினர் முஸ்லிம் உட்பட சிறுபாண்மையினர்தான்..5%சதவீதம் கூட இல்லை.பெரும்பாண்மை சமூகத்தில் சிறுபாண்மையினர் வாயில்லா பூச்சிகள்தான்.பலமும் பலகீனமும் அதான்.முஸ்லிம் நாடுகளிலும் அதான் நிலை.புரிந்தால் சரி...


montelukast sodium
செப் 23, 2025 20:05

புனித பூமி விட்டு அங்க ஏன் போனீங்க ஆஞ்சநேயா?. அங்கேய் சீதை இல்லை , ராமனும் இல்லை, உன்னை டாலர் சம்பாதிக்க வச்சவனை தான் தேடிகிட்டு இருக்கோம். பறந்து வா மின்னல் வேகத்தில்....


Santhakumar Srinivasalu
செப் 23, 2025 20:04

அனுமனைப் பற்றி என்ன தெரியும்?


Kulandai kannan
செப் 23, 2025 19:29

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பெரும்பான்மை கலாசாரம் இருக்கும். அதை மதித்து நடப்பது சிறுபான்மையினருக்கு அமைதியும் நலமும் தரும். இங்குள்ள முஸ்லீம், கிறித்தவர் களுக்கும் இது பொருந்தும். பெரும்பான்மை இந்துக் களுடன் எல்லாவற்றிற்கும் போட்டி போடக்கூடாது.


Kalyanaraman
செப் 23, 2025 19:23

இப்படி பேசுவதில் வியப்பில்லை.


Partha
செப் 23, 2025 19:12

kazuthaiku theriuma karpura vasanai


VENKATASUBRAMANIAN
செப் 23, 2025 18:43

திமுகவிடம் பயிற்சி பெற்றவர் போலும்


Jagan (Proud Sangi )
செப் 23, 2025 18:41

இவர் சொன்னது தான் 10 கட்டளைகளில் முதல் மூன்று 10 Commandments . இது பழய ஏற்பாட்டில் உள்ளது தான். ஒன்றும் புதிதல்ல


Modisha
செப் 23, 2025 18:34

அமெரிக்காவிலும் திமுக கட்சி இருக்கா


Modisha
செப் 23, 2025 18:32

அமெரிக்காவில் இருக்கும் ஹிந்துக்கள் கூட சொரணையோடு இருக்கிறார்கள் . ஆனால் இங்கே அது மிஸ்ஸிங்.