உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெயில் கொடுமை: சவுதியில் 1,000 பேர் பலி

வெயில் கொடுமை: சவுதியில் 1,000 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மெக்கா : கடும் வெப்பம் காரணமாக சவுதியில் உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முஸ்லிம் மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக, ஆண்டுதோறும் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். இந்தாண்டு, கடந்த 14ம் தேதி இந்த புனித யாத்திரை துவங்கியது.சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வரும் சூழலில், யாத்திரை வந்தவர்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், கடும் வெப்பத்தால் இந்தியா உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,081 ஹஜ் பயணியர் இறந்தது தெரிய வந்துள்ளது.இதில், அதிகபட்சமாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 658 பேர் பலியாகி உள்ளனர். நம் நாட்டைச் சேர்ந்த 98 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பலருக்கு ஏற்கனவே உடல் உபாதைகள் இருந்ததாகவும், வயோதிகம் காரணமாக இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர, கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுக்க, சவுதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், சவுதி அரசு தரப்பில் இறந்தவர்களின் விபரத்தை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஹஜ் யாத்திரை வந்தவர்களில் பலர் மாயமாகி உள்ளதால், அவர்களின் நிலை என்னானது என்பது தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனினும், இதுவரை இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramaswamy Jayaraman
ஜூன் 24, 2024 12:45

மாயமானவர்கள், இளம் வயதினராக இருக்கும். அவர்கள் பிழைப்புக்காக சென்றவர்கள். அவர்களை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். வயதானவர்களாக இருந்தால் வெய்யிலின் கொடுமையில் ஏதாகிலும் ஆகியிருக்கலாம். இறந்தவர்கள் கடவுளிடம் சென்றிருப்பார்கள். RIP.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 24, 2024 07:00

மக்களே இப்போது மதம் சார்ந்து யோசிக்காம கொஞ்சம் தள்ளி போடுங்க


Kasimani Baskaran
ஜூன் 24, 2024 05:19

கடும் கோடை காலத்தில் யாத்திரை என்பது அவ்வளவு எளிதல்ல. திட்டமிடாமல் செல்வது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல. இனிமேல் யாத்திரை செல்வோர் அதற்கான விசா மூலம் சென்றால் சவூதி அரசு அதற்க்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வதை பல நண்பர்கள் சொல்லக்கேட்டு இருக்கிறேன்.


DUBAI- Kovai Kalyana Raman
ஜூன் 24, 2024 13:35

ஹஜ் யாத்திரை என்றாலே சவூதி விசா இல்லாமல் போக முடியாது .. கூட்டம் அதிகம், வெயில் அதிகம், சவூதி அரசாங்கம், வசதி பண்ணி கொடுத்தும், கூட்ட நெரிசல், ஓவர் சூடு ல் இறந்தால், அரசாங்கம் என்ன செய்ய முடியும் ..ஹஜ் கோடை காலத்தில் வந்ததால் இது நடந்து உள்ளது ..அடுத்த வருடம் ஹஜ் இன்னும் முன்னாள் போகும் ..வயசானவங்க போறதும் ஒரு காரணம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி