உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேச துரோக வழக்கில் கைதான ஹிந்து துறவி சின்மோய் தாஸூக்கு ஜாமின்

தேச துரோக வழக்கில் கைதான ஹிந்து துறவி சின்மோய் தாஸூக்கு ஜாமின்

டாக்கா: தேச துரோக வழக்கில் கைதான ஹிந்து துறவி சின்மோய் தாஸூக்கு இன்று வங்க தேச கோர்ட் ஜாமின் வழங்கியது.'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, இவர் வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, தேச துரோக வழக்கில் நவம்பர் 25 அன்று டாக்காவில் கைது செய்யப்பட்டார். அவருடன் 18 பேரும் கைதாகினர். சட்டோகிராம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கோர்ட்டில் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=126t2n7r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதை தொடர்ந்து வங்க தேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி , ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வழக்கு வங்கதேச கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வந்த நிலையில்,கருத்து சுதந்திரம் மற்றும் வங்க தேசத்தில் சிறுபான்மை மதத் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதங்களை உருவாக்கியது.இந்த நிலையில் டாக்கா கோர்ட், சின்மோய் கிருஷ்ண தாஸூக்கு இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை