உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைவது எப்படி? வைரலான வங்கதேச யூடியூபர் வீடியோவால் சர்ச்சை

இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைவது எப்படி? வைரலான வங்கதேச யூடியூபர் வீடியோவால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாகா: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து அந்நாட்டு யூடியூபர் ஒருவரின் பழைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என இணையதளவாசிகள் கூறியுள்ளனர்.வங்கதேசத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் இந்தியாவிற்குள் எப்படி அத்துமீறி, சட்டவிரோதமாக நுழைய முடியும் என்பதை விளக்கி வீடியோ ஒன்றை, தனது சேனலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய எல்லையில் உள்ள வங்கதேசத்தின் சுனம்கன்ஜ் மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.அதில், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய மக்களுக்கு எந்த ஆவணங்களும், விசாவும் அல்லது பாஸ்போர்ட்டும் தேவையில்லை. இந்தியாவிற்கு செல்லும் பாதையை காட்டி, இதன் வழியாக சென்றால் பிஎஸ்எப் வீரர்களிடம் மாட்டி கொண்டு பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் எனக்கூறுகிறார்.மேலும், பிஎஸ்எப் முகாம்களை காட்டியதுடன் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைவதற்கான வழி என சில சுரங்கப்பாதைகளை எடுத்துக்காட்டி உள்ளார். இந்த வழியாக சென்று நாட்டின் நற்பெயரை கெடுக்க வேண்டாம் என வங்கதேசத்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த இணையதளவாதிகள், இதில் கவனம் செலுத்தி அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.'எல்லைப் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? ஒரு யூடியூபருக்கு வழி தெரிந்தால், அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வளவு காலம் எல்லைப் பாதுகாப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று அபர்ஜிதா தேஷ்பாண்டே என்ற இணையதளவாசி கேள்விஎழுப்பி உள்ளார்.பாஞ்சி என்பவர், ' சட்டவிரோதமாக வருபவர்களுக்கு விசாக்கள் அல்லது பாஸ்போர்ட் தேவையில்லை. அவர்கள் சுரங்கப் பாதையைக் கடந்தவுடன், பான் கார்டுகள் மற்றும் ஆதார் அட்டைகள் விற்கப்படுகின்றன. வாருங்கள் வந்து ஓட்டளிக்கும் கடமையை நிறைவேற்றுங்கள்'என்று கூறியுள்ளார்.அமிர் ரஸா கான் என்பவர், வீடியோ வெளியிட்டது நல்லது; இப்போது நாம் பாதுகாப்பினை வலுப்படுத்த முடியும் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kanns
ஜூலை 29, 2024 12:48

Simply Encounter all Massive Foreign Infiltrators-Agents & concerned BSF-Police etc


Vijay D Ratnam
ஜூலை 28, 2024 21:47

சராசரியா எட்டிலிருந்து பத்து குட்டி போடும் வங்கதேச ஊடுருவல்காரனுங்களை, வங்கதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் இருக்கும் ஆட்களை ஆப் தி ரெக்கார்ட் ஆயிரம் பேத்த அவுட் ஆஃப் ஏரியால கொண்டு போயி சுட்டுத்தள்ளினால் ஹைவேஸ்ல லாரில அடிபட்ட நாய்க்கு இருக்கும் பச்சாதாபம் கூட இவனுங்க மீது இருக்காது. திருடனுக்கு தேள் கொட்டியது போல எவனும் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கூட கொடுக்க மாட்டான் ஒரு ஆயிரம் பேத்த போட்டுத்தள்ளி, இருக்குற பயலுவோலை புடிச்சி பார்டர்ல கொண்டு போய் வச்சி நாலு போடு போட்டு துரத்திவிட்டா பொறவு ஒருத்தனும் வரமாட்டான். அடி ஒவ்வொண்ணும் இடி மாதிரி இறக்குனா துண்டைக்காணோம் துணிய காணோம்னு தலை தெறிக்க ஓடுவானுங்க.


r ravichandran
ஜூலை 28, 2024 21:07

மம்தா பானர்ஜி இருக்கும் வரை இந்தியாவில் சட்ட விரோதமாக நுழைய எந்த கவலையும் இல்லை, ஆனால் ஓட்டு மட்டும் அவருக்கு போட்டு விட வேண்டும்.


KRISHNAN R
ஜூலை 28, 2024 20:29

என்ன செய்றது.. வுழல் அரசியல கூட்டணிகள் நாட்டை என்ன செய்துள்ளார்கள்..சுயநலத்திற்காக


Pandi Muni
ஜூலை 28, 2024 19:11

மம்தா இருக்கும் வரை ஏன் சுரங்கப்பாதை வழியாக வரவேண்டும் நேரடியாகவே நுழையலாமே


subramanian
ஜூலை 28, 2024 18:55

காங்கிரஸ் ஆட்சியில் மையினாரிட்டி தாஜா அரசியல் செய்ததின் விளைவு இது. சி ஏ ஏ வுக்கு எதிராக ஆட்டம் போடுபவர்கள் இதற்க்கு பதில் சொல்லவேண்டும். சட்டவிரோத தாஜா அரசியலை ராகுல் விடவேண்டும். நாட்டின் பாதுகாப்பை கருதி சி ஏ ஏ அமல்படுத்த அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 28, 2024 18:07

வெத்து வேட்டு மோடி 2014 தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னது ....... ஊடுருவல்காரர்களே .... மூட்டை முடிச்சுடன் தயாராக இருங்கள் ... உங்கள் அனைவரையும் வெளியேற்றிவிடுவோம் .....


rama adhavan
ஜூலை 28, 2024 21:48

என்ன கருத்து இது. மடையன் கூட இப்படி எழுத மாட்டான்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை