உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரினால் குழந்தைகளுக்கு பேரழிவு: பிரதமர் மோடி கவலை

போரினால் குழந்தைகளுக்கு பேரழிவு: பிரதமர் மோடி கவலை

கீவ்: உக்ரைன் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை கட்டியணைத்தும், கைகுலுக்கியும் வரவேற்றார். பிறகு போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள போரில் உயிரிழந்த குழந்தைகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினர்.

வரவேற்பு

போலந்து பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ரயில் மூலம் உக்ரைன் சென்றடைந்தார். அங்கு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர், அங்கு தங்கி உள்ள இந்தியர்கள் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0o23bdob&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மரியாதை

பிறகு கீவ் நகரில் உள்ள மஹாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கீவ் நகரில் மஹாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரின் லட்சியங்கள் உலகளாவியவை மற்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிப்பவை. மனித குலத்துக்கு அவர் காட்டிய வழியை நாம் அனைவரும் பின்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஞ்சலி

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள போர் நினைவிடத்திற்கு மோடி சென்றார். அங்கு ஏற்கனவே வந்து இருந்த ஜெலன்ஸ்கி, மோடியை கட்டியணைத்தும், கைகுலுக்கியும் வரவேற்றார். தொடர்ந்து, நினைவிடத்தில், போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவாக அஞ்சலி செலுத்தினர். ஜெலன்ஸ்கியின் தோல்களில் கைகளைப் போட்டவாறு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: ஜெலன்ஸ்கியுடன் சேர்ந்த போரில் உயிரிழந்த குழந்தைகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். போர், இளம் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளை இழந்த பெற்றோரின் நினைவாக எனது மனம் உள்ளது. இந்த சோகமான நேரத்தில் அவர்களுக்கு தைரியம் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.ஜெலன்ஸ்கி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அனைத்து நாட்டிலும், பாதுகாப்பாக வாழ குழந்தைகளுக்கு உரிமை உள்ளது. இதனை நாம் சாத்தியமாக்க வேண்டும். எனக்கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து மோடியும், ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, ரஷ்ய தாக்குதல் குறித்தும், போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இருவரும் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 23, 2024 21:16

ராஜாஜி சொல்லியே அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆயுதப்போட்டியைக் கைவிடலை ..... நீங்களும் வாசுதேவ குடும்பகம் ன்னு சொல்லிட்டு ஆயுதங்களை, ஏவுகணைகளை ஏற்றுமதி பண்றீங்க ..... இந்த லட்சணத்துல அமைதிக்கான நோபல் உங்களுக்குத்தான் கிடைக்கப்போவுது ன்னு உருட்டுறாங்க .....


Ramesh Sargam
ஆக 23, 2024 20:27

மோடி அவர்களால் சமாதானம் மட்டும்தான் செய்யமுடியும். இனி அவரின் அறிவுரையை ஏற்று இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தையில் இறங்கி போரை நிறுத்தி சமாதான முறையில் பிரச்சினைகளை தீர்க்க முயலவேண்டும்.


Mr Krish Tamilnadu
ஆக 23, 2024 17:11

உள்ளூரில் ஆக்ரோஷ காரியங்களை, அமைதியாக காய் நகர்த்தி முடிக்கும் சாணக்கியர். உலகுக்கு அமைதி தூதர். காந்திய வழியில் அகிம்சை அமைதி தூதர். இவரின் செயல்பாடுகள் உலகால் கவனிக்க படுகிறது, பாராட்டுகள்.


Kanagaraj M
ஆக 23, 2024 17:10

போரில் ரஷ்யாவுக்கு ஆதரவு, நட்புறவில் உக்ரைன். கட்டித்தழுவிய இரு நாட்டு மன்னர்கள்.


Palanisamy Sekar
ஆக 23, 2024 17:01

அய்யா தெரியாமல் கேட்ககூடாதவங்க பேச்சை கேட்டு போரில் ஈடுபாட்டுடன், இப்போதைக்கு உங்களை விட்டால் எங்களை காப்பதற்கு யாருமே இல்லை. புடின் கிட்ட பேசிட்டீங்கன்னு நினைக்கிறேன். தயவு கூர்ந்து இந்த போரை நிறுத்த உங்களால் ஆனதை செய்யுங்கள் அய்யா என்று நம்ம பிரதமரை கேட்பது போல இருக்கிறது. இந்த அகில உலக அரசியலில் மோடிஜியை தவிர யாருமே இந்த போரை நிறுத்தவே முடியாது. காரணம் புடினிடம் பேசக்கூட பல நாட்டு அதிபர்கள் பயந்துகொள்வார்கள். மோடிஜி மட்டுமே உக்ரைனை காப்பாற்ற முடியும் என்று உறுதிபட கூறலாம். போர் நிற்குமே என்றால் மோடிஜிக்கு உலக அளவில் மிகப்பெரிய நற்பெயர் நிச்சயம் உண்டு.சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் நம்ம மோடிஜி


அப்பாவி
ஆக 23, 2024 15:32

அப்போ காலிதான்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ