உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்; பிரதமர் மோடி பெருமிதம்

இதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்; பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜார்ஜ்டவுன்: '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பணிக்கிறேன்' என பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.கொரோனா பெருந்தொற்று காலத்தில், டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உதவினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இந்தியா - டொமினிகா நல்லுறவை வலுப்படுத்த மோடி எடுத்து வரும் முயற்சியை அங்கீகரிக்கும் விதமாகவும், நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கவுரவ விருது, இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7iit9tye&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தனது 3 நாடுகளுக்கான பயணத்தின் இறுதி கட்டமாக, கயானாவிற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு நடந்து உச்சிமாநாட்டின் போது, டொமினிகாவின் ஜனாதிபதி சில்வானி பர்ட்டனா, பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதான டொமினிகா கவுரவ விருது வழங்கி கவுரவித்தார். இந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:டொமினிகாவால் மிக உயர்ந்த தேசிய விருதை வழங்கியதற்காக பெருமைப்படுகிறேன். 140 கோடி மக்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். 'இந்த விருது, கோவிட் தொற்றுவின் போது டொமினிகாவிற்கு பிரதமர் மோடி செய்த உதவிகள், இந்தியா-டொமினிகா ஆகிய இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தவும், விருது வழங்கப்பட்டுள்ளது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Oviya Vijay
நவ 21, 2024 15:46

அங்கேயும் வடை சுட போயிட்டீங்களா ஜி... பார்த்து சூதானமா...


hari
நவ 21, 2024 17:03

ஒரு கீழ்த்தரமான 200 ரூபாய் டாஸ்மாக் உப்பிஸ் கமென்ட்....என்ன செய்ய.....


hari
நவ 21, 2024 17:05

என்ன பண்றது.....உன் டிசைன் அப்படி


S.Martin Manoj
நவ 21, 2024 12:33

வேணாண்டா சாமி இதுக்கு ஒரு ஜிஸ்டி போட்டு எங்க தலைல கட்டிரபோர


அப்பாவி
நவ 21, 2024 09:41

யாரு கேட்டா? இந்தியாவுல நடக்குற ஃப்ராடுத்தனங்கள் நைஜீரியா ஃப்ராடை தூக்கி சாப்புட்டுரும் போலிருக்கு.


Barakat Ali
நவ 21, 2024 10:05

ஃப்ராடுத்தனங்கள் செய்வதில் உன் திராவிட மாடலுக்கு ஈடு இணை இல்லை ......


Kumar Kumzi
நவ 21, 2024 10:13

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போடுறவெ கருத்து எழுதுறா


hari
நவ 21, 2024 11:09

கோவாலு நமக்கு எப்பவுமே காமெடி பீஸ் தான்....


Kalyanaraman
நவ 21, 2024 07:48

பல நாட்டுத் தலைவர்களால் புகழப்படும், பாராட்டப்படும், மரியாதைக்குரிய உண்மையான உலக நாயகன் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.


புதிய வீடியோ