உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானை அடித்து நொறுக்குவேன்...: டிரம்ப் எச்சரிக்கை

ஈரானை அடித்து நொறுக்குவேன்...: டிரம்ப் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''அமெரிக்கா நலனுக்கு இடையூறு செய்தால், ஈரானை அடித்து நொறுக்குவேன்,'' என அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய இரண்டு முறை முயற்சி நடந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். ஈரானால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.இந்நிலையில் வடக்கு கரோலினாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பேசியதாவது: என்னை கொலை செய்ய இரண்டு முறை முயற்சி நடந்தது. அதில் ஈரான் நாட்டுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. நான் அதிபராக இருந்தால், உங்களை எச்சரிக்கும் வகையில் எனது நடவடிக்கை இருந்து இருக்கும். முன்னாள் அதிபர்களையோ அல்லது அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையோ கொலை செய்ய முயற்சித்தால், ஈரானை அடித்து நொறுக்குவேன் என எச்சரிக்கிறேன்.ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் அமெரிக்க வருகை விசித்திரமானது. அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது என தகவல் வந்ததும், அமெரிக்காவில் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மற்றும் அடுத்த அதிபராக போகிறவரை மிரட்டும் அவருக்கு அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Jagan (Proud Sangi)
செப் 26, 2024 18:50

இவர் சவுதியின் அடியாள் . இவரோட மாப்பிள்ளை ஈரான் எதிரி சவுதியில் நிறைய முதலீடு செய்துள்ளார்.


Easwar Kamal
செப் 26, 2024 17:40

ஐயா நீங்கள் ஆப்கானில் செஞ்சதையே போதும். தடால் அடியா தீவிரவாதி நாட்டை கொடுத்துட்டு கிளம்பின உடனே உங்கள் வீரம் என்னதுனு தெரியும். ஆள் பக்கத்தான் பயில்வான் உள்ளுக்குள்ள கோழை . உங்களை விட கமலா ஹாரிஸ் சிறப்பக செயல் பட வாய்ப்பு உள்ளது. டிரம்ப் ப்ரிச்சனை என்ன வென்றால் யார் சொல்வதையும் காது கொடுத்து கேப்பது கிடையாது. தன்னை சுற்றி அழகான பெண்கள் வைத்து காலத்தை ஓட்டினதை மக்கள் மறக்க வில்லை. இதில் ஈரான் கூட சண்டை. சும்மா வாயால வடை சுட வேண்டாம்.


Kanns
செப் 26, 2024 12:44

Presently Iran Fundamentalists Shameless Slave Convertees Forgetting/ Shedding Glorius Civilisation are Rootcause of Jihadi Fundamentalism. World Must Destroy All their Leaders to Protect World & Humanity


தஞ்சை மன்னர்
செப் 26, 2024 10:29

ரொம்ப நாளா அவங்க பின்னாடி போனது போதும் முதலில் உங்க நாட்டில் ஹிந்து கோவில் மற்ற வழிபாடு தளம் மற்றும் உங்க நாட்டுகுள்ள இருக்கும் குற்றவாளிகளை கண்டு பிடித்து தடுக்க முயற்சி செய்யப்ப


முக்கிய வீடியோ