உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தற்கொலை செய்துகொண்ட எந்திர மனிதன்!: தென்கொரியாவில் கண்ணீர் அஞ்சலி

தற்கொலை செய்துகொண்ட எந்திர மனிதன்!: தென்கொரியாவில் கண்ணீர் அஞ்சலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்: தென் கொரியாவில் அரசு அலுவலகத்தில் பணியாளராக இருந்த ரோபோ ஒன்று ஓய்வின்றி அதீத வேலையில் ஈடுபட்டதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு 2வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கான படிக்கட்டில் விழுந்து நொறுங்கியது. இது ரோபோவின் தற்கொலையாக பார்க்கப்படுவதாக கூறுகின்றனர்.தொழில்நுட்பங்களின் வளர்ச்சி சில நேரங்களில் மனிதர்களுக்கு உதவினாலும், மனிதவளத்திற்கு ஆபத்தாகவும் முடிகிறது. தொழில்நுட்பத்தின் அடுத்தப் படிநிலையாக பார்க்கப்படும் ரோபோக்கள் மனிதர்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் செய்யும் வேலைகளை சில நிறுவனங்கள் ரோபோக்கள் மூலம் செய்து, மனிதவள பயன்பாட்டை குறைத்து வருகிறது. அப்படி வேலை செய்யும் ரோபோ மனிதர்களை விட துரிதமாக வேலையை முடித்துவிடுகிறது. இதனால் ரோபோக்கள் ஓய்வில்லாமல் 'உழைத்து' வருகிறது. அப்படி ஒரு ரோபோ ஓய்வின்றி உழைத்து தற்கொலையே செய்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது. தென் கொரியாவில் உள்ள குமி நகர சபை அரசு அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவுவதற்காக 'ரோபோ' உருவாக்கப்பட்டது. அரசு ஊழியராகவே பார்க்கப்பட்ட அந்த ரோபோ திடீரென தற்கொலை செய்து கொண்டது அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரோபோ, அந்த அலுவலகத்தின் 2வது தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றிச் சுற்றி வந்ததாகவும், மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் தெரிவித்தனர்.

பின்னர் 2வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் படிக்கட்டில் விழுந்து நொறுங்கியுள்ளது. சேதமடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஓய்வின்றி அதீத வேலையில் ஈடுபட்டதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இப்படி நடைபெற்றதால், இது ரோபோவின் தற்கொலையாக பார்க்கப்படுகிறது. அலுவலகத்தில் உள்ளூர் வாசிகளுக்கு உதவி வந்த இந்த ரோபோவின் தற்கொலையால் அங்குள்ளவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

ரோபோவின் பணி

கலிபோர்னியாவில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோ, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டது. இந்த ரோபோவுக்கு தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டும் இருந்தது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக கொண்ட இந்த ரோபோ, அலுவலகம் வரும் உள்ளூர் வாசிகளிடம் இருந்து தினசரி ஆவணங்களை பெற்று, அதிகாரிகளிடம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தது. இதற்கு முன்பு இருந்த இதுபோன்ற உதவியாளர் ரோபோக்கள் பொதுவாக ஒரு தளத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்த ரோபோ லிப்ட் மூலம் பல தளங்களில் வேலை செய்யுமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rpalnivelu
ஜூலை 05, 2024 04:45

பெஞ்சு தேய்க்கும்/லஞ்சத்திலேயே ஊறிப்போன அரசு ஊழியர்களை போல்லிலாமல் உண்மையாக உழைத்து உயிரை விட்ட உனக்கு ஊழலின் ஊற்றுக்கண்ணுக்கு சிலை வைப்பதற்கு பதில் உனக்கு வைக்கணும்


சாமிநாதன்,மன்னார்குடி
ஜூலை 04, 2024 17:31

உங்களுக்கு தமிழர்களை போல் அறிவே இல்லையா?


Swaminathan L
ஜூலை 04, 2024 16:01

ஒரு இயந்திரம் அதீத இயக்கத்தின் காரணமாக தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதை தற்கொலை என்று சொல்லும் அளவுக்கு மனிதரின் பகுத்தறிவு பாழ்பட்டுக் கிடக்கிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது சில காரணங்களுக்காக, வாழப் பிடிக்கவில்லை, வாழ்ந்தது போதும் என்று முடிவெடுத்து இறுதித் துணிச்சலில் மனிதன் தன் உயிரைக் தானே மாய்த்துக் கொள்வது தற்கொலை. தொழில்நுட்பக் கோளாறில் காரணமாக இயக்கக் கட்டுப்பாடு இழந்தது தற்கொலை என்றால் எப்படி? அடுத்ததாக, அதன் தற்கொலைக்குக் காரணம் அதை ஓய்வு ஒழிச்சலின்றி எப்போதும் வேலை வாங்கிய மேலாளர் ஒருவர் என்று அவர் மேல் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு, தண்டனை என்று போகுமோ?


theruvasagan
ஜூலை 04, 2024 15:51

நம்ம ஊரு இயந்திரன் விஞ்ஞானி வசீகரைனை கூப்பிட்டால் உடைந்த பாகங்களை பட்டி டிங்கரிங் பார்த்து ஒட்ட வைத்து அந்த ரோபோவுக்கு மீண்டும் உயி்ர் கொடுப்பார்.


Senthoora
ஜூலை 04, 2024 15:15

ஆரோ ரோபோவால் ஒருவருடம் கூட வேலைப்பளுதாங்க முடியவில்லை, ஒரு மனிதன் தனது ஓய்வுதிய வயதுவரும் வரை, சுமார் 40 வருடங்களுக்கு ஓய்வு இல்லாமல் , குடும்ப, வேலை ன்று வேலை செய்கிறான். இந்த ரோபோவால் தாங்க முடியல. அதுக்கு, குடும்பமா, குட்டியா இருந்தது.


தமிழ்வேள்
ஜூலை 04, 2024 15:09

ஏதோ எந்திரம் சிதைந்ததால் , அது தற்கொலை என்று ஆயிற்று ....அதே நேரம் அந்த ப்ரோக்ராம் கோளாறு , மனிதர்களை கொல்வதாக மாறியிருந்தால் ? எந்த கோர்ட் , எந்த சட்டத்தின் கீழ் யாரை தண்டிக்கும் ? எந்திர ரோபோவையா ?


Palanisamy Sekar
ஜூலை 04, 2024 14:38

இயந்திரக்கோளாறு மனிதனை போலவே மனக்கோளாறு போல. ஒருவேளை சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் போலும். இல்லையென்றால் ஒருதலைக்காதலாக கூட இருக்க வாய்ப்பு இருக்கலாம். என்னதான் இருந்தாலும் நம்ம ஊர்க்காரர் பேரீச்சம்பழத்துக்கு உடைந்த பாகங்களை கேட்கும் முன்னர் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தி மீண்டும் உயிர் கொடுங்கள் பாவம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ