உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சாம்பியன்ஸ் டிராபி - சுப்மன் கில் சதம்: இந்தியா அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி - சுப்மன் கில் சதம்: இந்தியா அபார வெற்றி

துபாய்: துபாயில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதமடிக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு செய்தது.வங்க தேச அணியின் சவுமியா சர்கார் (0), கேப்டன் நஜ்முல் ஷாண்டோ (0) என இருவரும் 'டக்' அவுட்டாகினர். மெஹிதி ஹசன் 5 ரன் எடுத்தார். 9வது ஓவரை வீசிய அக்சர் படேல், 2வது பந்தில் தன்ஜித் (25), 3வது பந்தில் முஷ்பிகுரை (0) அவுட்டாக்கினார். 4வது பந்தில் ஜேக்கர் அலி கொடுத்த எளிய 'கேட்ச்' வாய்ப்பை, சிலிப் பகுதியில் கேப்டன் ரோகித் தவற விட, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.வாய்ப்பை பயன்படுத்திய தவ்ஹித், ஜேக்கர் அலி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தவ்ஹித் 100 ரன்களுக்கும் ஜேக்கர் அலி 68 ரன்களுக்கும் அவுட்டானார்கள். அடுத்து வந்த ரிஷத் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் விரைவில் பெவிலியன் திரும்பினர். வங்கதேச அணி 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் முகமது ஷமி 5, ஹர்சித் ராணா 3, அக்சர் படேல் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.இதனையடுத்து எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா சுப்மன் கில் களமிறங்கினர். ரோகித்சர்மா 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கோஹ்லி 22 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 15, அக்சர் படேல் 8 ரன்களிலும் அவுட்டானார்கள். அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 126 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 101 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுலும் 41 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை