உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா;யுத்தத்தை அல்ல: மோடி பேச்சு

உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா;யுத்தத்தை அல்ல: மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வியன்னா: உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா , யுத்தத்தை அல்ல என ஆஸ்திரியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.அரசு முறைப்பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரியா சென்று அந்நாட்டு பிரமதர் கார்ல் நெஹம்மரை சந்தித்து பேசினார்.தொடர்ந்து வியன்னாவில் ஆஸ்திரிய வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோடி பேசியது, இந்தியா -ஆஸ்திரியா இடையே 75 ஆண்டுகால நட்புறவை கொண்டாடுகிறது. மேலும் ஆஸ்திரியாவிற்கு இந்தியர்கள் முக்கியமானவர்களாக உள்ளனர். இரு நாடுகளிடையே பல்வேறு ஒற்றுமைகளை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவில் அன்மையில் உலகின் மிகப்பெரிய அளவில் தேர்தல் நடத்தியுள்ளோம். 60 கோடி இந்தியர்கள் வாக்களித்தனர். 60 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளோம். இந்தியா ஒரு போதும் போரை துவக்காது. உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா யுத்தத்தை அல்ல என்றார்.முன்னதாக வியன்னா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, வந்தே மாதரம் பாடல் இசை வடிவில் ஒலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

saravanan
ஜூலை 12, 2024 07:15

அமைதி, அஹிம்சை வழியை போதித்தவர் புத்தர். அம்பு எய்தி வெல்ல முடியாததை அன்பு எய்தி வெல்ல முடியும் என்பதை உணர்த்தியவர். சாதாரண விவாத மேடைகளிலேயே வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் ஆக்ரோஷமாகிறதே தவிர விவேகமாவதில்லை. சாமானிய மனிதர்களின் இயல்பு அது. இரண்டு ஆண்டுகளாகியும் ரஷ்ய உக்ரைன் போர் ஓய்ந்த பாடில்லையே. நீங்கள் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்பதை பிரதமர் மோடிஜி அழகாக குறிப்பிட்டிருக்கிறார்.


அப்புசாமி
ஜூலை 11, 2024 12:17

அரசு வரலாற்றை மாத்தி எழுதணும். மகாபாரததத்தில் யுத்தமே நடக்கலை. ஒருத்தரை ஒருத்தர் கிச்சு கிச்சு மூட்டி வென்றார்கள். அசோகர் கலிங்கத்தை காசு குடுத்து வாங்கினாரு. சிப்பாய் கலகம் நடக்கவே இல்லை. முதலாம், இரண்டாம் பானிபட் யுத்தம் ஒரு விளையாட்டு போட்டியாக்கும். இந்தியா பாகிஸ்தான் நடுவில் பொம்மை துப்பாக்கி வெச்சி விளையாடினாங்க. கார்கில் யுத்தம் சும்மா திருடன் போலுஸ் விளையாட்டு. லடாக்ல நம ஆளுங்க சண்டை.போடாம கோலி.குண்டு விளையாடுனாங்க. ரந்பேல், அபாச்சி , ஏவுகணை யெல்லச்ம் நாமளே வாங்கி அவிங்க சண்டை போட ஆயுதம் இல்லாம பாத்துக்குறோம். காந்தியே டயாபிடிஸ்ல தான் செத்தாரு.


venugopal s
ஜூலை 11, 2024 10:43

அதே இந்தியா தான் சில தத்தி பிரதமர்களையும் கொடுத்து மக்களை கொடுமைப் படுத்துகிறது!


Ramesh Sargam
ஜூலை 11, 2024 09:55

“புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” இந்தியா புத்தரின் அமைதி வழியில் / மார்க்கத்தில் செல்லும் ஒரு நாடு.


Barakat Ali
ஜூலை 11, 2024 08:17

ஆஹா.. மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது .........


Priyan Vadanad
ஜூலை 11, 2024 00:41

நமது முதல்வரின் இந்த தேர்தலுக்கு முந்திய போட்டோக்களை பிரசுரியுங்கள். கொஞ்சம் சிரித்த மாதிரி இருக்கும். தேர்தலுக்கு பிந்திய போட்டோவில் பாவம் அவர் வருத்தப்பட்டு கவலையுடன் இருப்பது போல தெரிகிறது.


hari
ஜூலை 11, 2024 06:21

என்ன பிரியன்.... காலையில் ஜனானோதாயம்......


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ