வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த அமைப்பின் செயல்பாடுகள் என்ன?
Ulal
indhis vazhikaatuthaa?! nalla thamash.
நியூயார்க்: உலகளாவிய ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பின் வழிகாட்டுதல் குழுவில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐ.நா.வின் உறுப்பு அமைப்பான ‛‛குளோபி'' என்ற அமைப்பு ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பாகும். இதில் 121 நாடுகளைச் சேர்ந்த 291 பேர் உறுப்பினர்களாக உள்ளன. 2021ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா. பொதுச்சபை சிறப்பு கூட்டத்தின் போது இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தலைவர், துணை தலைவர், 13 உறுப்பினர்கள் என 15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு மூலம் செயல்பட்டு வருகிறது. நாடுகளுக்கிடையே எல்லை தாண்டிய ஊழல் குற்றங்களைக் கண்டறிந்து, விசாரணை செய்து, சட்ட அமலாக்க அதிகார அமைப்புகளுடன் இணைந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் இந்த அமைப்பு கொண்டுள்ளது.இந்நிலையில் சீன தலைநகர் பீய்ஜிங்கில் இந்த அமைப்பின் 5 வது அமர்வில் நடந்த பல்வேறு கட்ட வாக்கெடுப்பிற்கு பின் வழிகாட்டுதல் குழுவில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அமைப்பின் செயல்பாடுகள் என்ன?
Ulal
indhis vazhikaatuthaa?! nalla thamash.