உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மன்னிப்பு கேட்குமாம்: அமெரிக்க அமைச்சர் ஆணவப்பேச்சு

இந்தியா மன்னிப்பு கேட்குமாம்: அமெரிக்க அமைச்சர் ஆணவப்பேச்சு

வாஷிங்டன்: வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிடம் இந்தியா 2 மாதங்களில் மன்னிப்பு கேட்கும் என்று அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் ஆணவாக பேசி இருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதை எதிர்க்கும் அமெரிக்கா, இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதித்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் மிரட்டல், நெருக்கடி உள்ளிட்டவற்றை புறம் தள்ளிய இந்தியா, சீனாவுடன் வர்த்தக உறவை வலுவாக்க தொடங்கி இருக்கிறது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், 7 போர்களை நிறுத்தியதாக உளறித் தள்ளி வருகிறார். அவருக்கு இணையாக தற்போது அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சர்ச்சைக் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். வரிவிதிப்பு விவகாரத்தில் ஓரிரு மாதங்களில் அமெரிக்காவிடம் இந்தியா மன்னிப்பு கேட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரும் என்று கூறி உள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் ஹோவார்ட் லுட்னிக் மேலும் கூறியிருப்பதாவது;அமெரிக்க சந்தை இல்லாமல் இந்தியாவின் வணிகங்கள் செழிக்க முடியாது. அதை இந்தியா உணர்ந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் மன்னிப்பு கோரும். அவர்கள் எந்த பக்கம் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ளும். பிரதமர் மோடியை எப்படி கையாள வேண்டும் என்பதை டிரம்பிடமே நாங்கள் விட்டுவிடுகிறோம். சீனர்கள் எங்களிடம் விற்பனை செய்கிறார்கள், இந்தியர்களும் எங்களுக்கும் விற்பனை செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளாக (இந்தியா, சீனா) விற்பனை செய்து கொள்ள முடியாது. நாங்கள் தான் உலகின் பெரிய நுகர்வோர் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் தான் உலகின் நுகர்வோர் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு ஹோவார்டு லுட்னிக் கூறி இருக்கிறார்.இந்தியா, ரஷ்யா ஆகிய இருநாடுகளையும் இருண்ட தேசமான சீனாவிடம் தொலைத்து விட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பி உள்ளார். அவரின் புலம்பல் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், வர்த்தக அமைச்சர் ஹோவார்டு லுட்னிக்கின் இந்த ஆணவ பேச்சு வெளியாகி வந்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
செப் 06, 2025 09:23

மன்னிப்பும், மதிப்பும், மரியாதையும் கேட்டுப்பெறுவதல்ல ஹோவர்ட் லுட்னிக் அவர்களே. அதை நீங்கள் மிரட்டியும் பெறமுடியாது இந்தியாவிடமிருந்து. கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது மோடி ஆட்சி. காங்கிரஸ் ஆட்சி அல்ல.


கண்ணன்
செப் 06, 2025 09:14

இந்தமாதிரி ஆட்களையெல்லாம் வைத்துக்கொண்டு, இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டதாக ட்ரம்ப் புலம்பத்தான் முடியும்