உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய இன பசு ரூ.40 கோடிக்கு விற்பனை; கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு!

இந்திய இன பசு ரூ.40 கோடிக்கு விற்பனை; கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியோ: இந்தியாவின் நெலார் இனத்தை சேர்ந்த பசு மாடு, பிரேசில் நாட்டில் 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கால்நடை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.வெவ்வேறு விதமான சாதனைகளை கின்னஸ் உலக சாதனை புத்தகம் அங்கீகரிக்கிறது. அந்த வகையில், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கால்நடை என்ற பெருமையை பிரேசில் நாட்டில் விற்கப்பட்ட பசுவுக்கு வழங்கியுள்ளது கின்னஸ் அமைப்பு.'வையாடினா 19' என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பசுவின் வயது 53 மாதங்கள் மட்டுமே. இது, இந்தியாவில் ஓங்கோல் பகுதியை பூர்விகமாக கொண்ட நெலார் இனத்தை சேர்ந்த பசுவாகும். இதன் எடை 1101 கிலோ.இது, பிரேசில் நாட்டின் மினாஸ் கெரைஸ் நகரில் ஏலத்தில் விடப்பட்டபோது, 40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்த பசு, அழகு ராணியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளுக்காக நடத்தப்பட்ட அழகுப்போட்டியில், 'மிஸ் சவுத் அமெரிக்கா' என்ற பட்டத்தையும் இந்த பசு மாடு பெற்றுள்ளது.

எப்படி வந்தது பிரேசிலுக்கு

இந்தியாவின் ஓங்கோல் பகுதியில் மட்டுமே இருந்த நெலார் இன பசு மாடுகள், 1868ம் ஆண்டு கப்பல் மூலம் பிரேசில் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதாக, தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

MUTHU
பிப் 12, 2025 09:59

நெல்லோர் இன மாடுகளுக்கு சிறப்பு தன்மைகள் உண்டு. தானாகவே survive செய்து கொள்ளும். வெயிலில் சோர்ந்து போகாது. மழையில் துவளாது. கடினமாய் உழைக்கும். எந்த உணவையும் எடுத்துக் கொள்ளும். எளிதாய் கருப்பிடித்து குட்டிகள் ஈனும். நிறைய பலன்கள் கொடுக்கும்.


Haja Kuthubdeen
பிப் 12, 2025 08:49

இவர்கள் எல்லாம் என்ன புரிந்து கொண்டார்களோ...ஏலம் போனது பிரேசில் நாட்டில்...அந்த பசுவும் பிரேசிலில் உள்ளது...இந்திய இன பசு...இதற்கு ஏன் இங்குள்ளவர்கள் சண்டை போடுகிறார்கள்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 11, 2025 22:57

இந்த 40 கோடியில் 7 கோடியை ஓனர் ஜி எஸ் டி மொய் எழுத வேண்டுமே.


N Sasikumar Yadhav
பிப் 12, 2025 00:23

அந்த ஜிஎஸ்டி உங்க மானங்கெட்ட திராவிட மாடல் கோபாலபுர குடும்பத்துக்கு பங்கு போகுமே மத்தியரசுக்கு போகும் நிதி வளர்ச்சி திட்டங்களுக்கு ஆனால் தமிழகத்தில் கோபாலபுர கொத்தடிமைகள் வளர்ச்சிக்கு


Raj S
பிப் 12, 2025 00:24

ஓங்கோல்லேர்ந்து வந்த திருட்டு திராவிட கோபாலபுர குடும்பத்துக்கு எவ்வளவு குடுக்கணும்?? ஹா ஹா ஹா


Kumar Kumzi
பிப் 12, 2025 00:50

ஏன்டா கொத்தடிமை கூமுட்ட ஓங்கோல் என்றாலே சின்ன குழந்தைக்கு கூட அந்த திருட்டு திராவிஷ குடும்பத்தை தெரியுமே


Pandi Muni
பிப் 12, 2025 09:45

விற்பனையானது பிரேசில் நாட்டிலென்பது கூட தெரியாத திராவிடன்


PR Makudeswaran
பிப் 12, 2025 09:51

ஓனர் ஏன் ஜி எஸ் டி எழுத வேண்டும்? சரியாக படிக்க வேண்டும். இந்தியாவில் இல்லையே? தலைக்கு மேலே கொஞ்சம் இருக்கிறதா இல்லையா?


Kumar Kumzi
பிப் 11, 2025 22:07

நல்ல நேரம் கட்டுமரம் கண்ணில் படவில்லை போலிருக்கு


Karthik
பிப் 11, 2025 22:03

அந்நிய தேசத்தில் காட்சி பொருளாக நம் பசுக்கள் - வேதனை..


kulandai kannan
பிப் 11, 2025 21:56

ஓங்கோல் என்றாலே கோடிகள்தான்


Iyer
பிப் 11, 2025 21:54

ரசாயன விவசாயம் மட்டும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டு, நாட்டு இனம் பசு சார்ந்த இயற்கை விவசாயம் செயல்படுத்தப்பட்டால், இந்தியா ஒரு தசாப்தத்திற்குள் 50 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை