உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கஜகஸ்தானில் சீன அமைச்சரை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

கஜகஸ்தானில் சீன அமைச்சரை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அஸ்தானா: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் தொடர் விரிசல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று(ஜூலை 04) கஜகஸ்தானில் சீன அமைச்சர் வாங் யி- யை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 24வது உச்சி மாநாடு, நேற்று(ஜூலை 03) துவங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். இன்று(ஜூலை 04) ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி- யை சந்தித்தார்.இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில், இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்துள்ளனர்.இருவரும் புகைப்படம் எடுப்பதற்கு முன், கைகுலுக்கிக் கொண்டனர். அப்போது, இரு நாட்டு தலைவர்களும் எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து சிறிது நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

மருது
ஜூலை 04, 2024 12:11

சந்திச்சு, சாப்புட்டு பேசிட்டு வாங்க. இங்கே சீன இறக்குமதி ஆத்மநிர்பார் கீழே அதிகமாயிட்டே போகுது.


Selvakumar Krishna
ஜூலை 04, 2024 12:11

மக்களை நேரில் சந்தித்து வெல்லமுடியாது புற வாசலில் பதவி சுகம் காணும் மானம் கெட்டவர்கள்


Amsi Ramesh
ஜூலை 04, 2024 14:51

இவ்வளவு தரக்குறைவாக பேசக்கூடாது


N Sasikumar Yadhav
ஜூலை 04, 2024 17:32

ஓசியும் இலவசங்களும் வாங்கிக் கொண்டு விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப்போடும் உங்கள மாதிரியான ஆட்களுக்கு படித்த திறமைசாலி பாரதநாட்டின் மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சரை பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை நம்பரே


மேலும் செய்திகள்







புதிய வீடியோ