உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!

ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபிஹ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. மொபைல் போன் மட்டுமின்றி அது சார்ந்த சாதனங்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்றவை தயாரிப்பில் நிகரின்றி விளங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம், உலக அளவில் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபிஹ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த மாத இறுதியில் பொறுப்பேற்க உள்ளார்.தற்போது, தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக உள்ள வில்லியம்ஸ், ஓய்வு பெறும் வரை, ஆப்பிள் வாட்ச் உற்பத்தியை சபிஹ் கான் மேற்பார்வையிடுகிறார்.

யார் இந்த சபிஹ் கான்?

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் பிறந்தவர் சபிஹ் கான். 1966ம் ஆண்டு சபிஹ் கான், தனது பள்ளிப் படிப்பின் போது சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் பொறியியலில் பாட பிரிவில் இளங்கலைப் பட்டங்களையும், ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.இவருக்கு பதவி உயர்வு வழங்கி புதிய பதவியில் ஆப்பிள் நிறுவனம் அமர்த்தி உள்ளது. ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், சபிஹ் கானின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar
ஜூலை 09, 2025 14:49

இந்திய வம்சாவளி .... அதிலும் கான் இதுல நம்மக்கென்ன பெருமை


Ganapathy
ஜூலை 09, 2025 12:22

இந்திய வம்சாவளி வேறு. இந்தியர் வேறு.


VARADHARAJANAYATHURA
ஜூலை 09, 2025 11:00

Dear sabhih khan You are real role model for young tech Indians for learning, hardwork and be in good book of the chief. wish you a happy lift in job ladder.