உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவை சேர்ந்த தந்தை, மகள் சுட்டுக்கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி!

இந்தியாவை சேர்ந்த தந்தை, மகள் சுட்டுக்கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த தந்தை, மகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இந்தியாவை சேர்ந்த பிரதீப் குமார் படேல், 56, என்பவர் பல்பொருள் அங்காடி ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் அவரது மகள் ஊர்மி (Urmi), 24, மற்றும் உறவினர்கள் பணிபுரிந்து வந்தனர். பிரதீப் குமார் படேல், அவரது மனைவி ஹன்சபென் மற்றும் அவர்களது மகள் ஊர்மி ஆகியோர் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஆறு ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். இந்நிலையில், பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பிரதீப் குமார் படேல் மற்றும் அவரது மகள் ஊர்மி உயிரிழந்தனர். கடை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஜார்ஜ் ப்ரேசியர் டெவோன், 44, என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவனிடம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் குமார் படேல் மற்றும் ஹன்சபென் ஆகியோருக்கு இன்னும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் கனடாவிலும், மற்றொருவர் ஆமதாபாத்திலும் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

B MAADHAVAN
மார் 24, 2025 00:26

வெளிநாட்டினருக்கு, உள்நாட்டில் யாராவது இதுபோல் ஜார்ஜ் ப்ரேசியர் டெவோன் போன்ற மக்கள் தொந்தரவு செய்தால், தயவு தாட்சண்யம் பார்க்காமல் பெரிய தண்டனை கொடுக்கப் பட வேண்டும். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டு பிரயாணிகளுக்கு, நம் மக்களும் , குறிப்பாக வெளிநாட்டு பெண்களுக்கு தொந்தரவுகள் எதும் செய்ததாக நிரூபிக்க பட்டால் மிகப் பெரிய தண்டனை வழங்கப் பட வேண்டும். அப்பொழுது தான் நம் நாட்டு சட்ட திட்டங்களினால் நம் மதிப்பு உயரும். நீதியரசர்கள், அரசியல்வாதிகளாக இருந்தாலும், யாராக இருந்தாலும், எல்லோரையும் ஒன்றாக பாவித்து எல்லோர்க்கும் ஒரே மாதிரி நீதி வழங்க வேண்டும்.


Senthoora
மார் 23, 2025 16:40

அமெரிக்காவுக்கு இப்போ, கட்டபொம்மன் பாஷயில் சொல்வதானாகில், வட்டி, வரி, திரை தான் வேண்டும். இந்த துப்பாக்கி வியாபாரத்துக்கு வரி விதிக்க டிரம்ப்இக்கு தில் இருக்கா?


Raj
மார் 23, 2025 13:37

அமெரிக்கா வளர்ந்த நாடு என்று சொல்லுகிறார்கள், ஆனால் இந்த துப்பாக்கி கலாச்சாரத்தை அவர்களால் கண்ட்ரோல் செய்ய திராணி கிடையாது. டிரம்ப் இதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Padmasridharan
மார் 23, 2025 13:00

அமெரிக்காவின் தல, இந்தியர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி, நடத்தும்போது மற்றவர்கள் இந்தியர்களை இப்படித்தான் கொள்ளையடிக்கிறார்கள், கொல்கிறார்கள். இதற்கு முன்பு இந்தியாவின் தலையைப் பற்றி பேசும்போது மாலத்தீவை வெறுத்தவர்கள் ஏன் இப்பொழுது அமெரிக்காவை வெறுப்பதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை