உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு!

கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில 3 நாட்கள் முன் மாயமான இந்திய மாணவி, கடற்கரையில்சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.பஞ்சாபில் உள்ள தேராபாசி என்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர் ஆம் ஆத்மி பிரமுகர் தவிந்தர் சைனி என்பவரின் மகள் வன்ஷிகா. வயது 21. இவர் கனடாவில் உள்ள ஒட்டாவா நகரில் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.கடந்த ஏப்.25ம் தேதி முதல் இவர் திடீரென மாயமானார். அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. வாடகைக்கு அறை ஒன்றை காண சென்ற அதன் பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. காணாமல் போன அவரை தீவிரமாக தேடி வருவதாக தூதரகமும் அறிவித்து இருந்தது.இந் நிலையில் மாணவி வன்ஷிகா உடல் கல்லூரி அருகில் உள்ள கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இது குறித்து உரிய துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, மேலும், மாணவி எப்படி உயிரிழந்தார், கொல்லப்பட்டாரா, உடன் சென்றவர்கள் யார், செல்போன் எங்கே என்ற விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Manalan
ஏப் 29, 2025 13:57

In Tamilnadu also.


Krishna
ஏப் 29, 2025 12:44

அட்டவாவில் கடற்கரை எங்கு இருக்கிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 12:14

ஆம் ஆத்மீ ??


Nandakumar Naidu.
ஏப் 29, 2025 11:31

"Om Shanti". Indians are must be careful when they are Abroad.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை