உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கைக்கு இந்தியா ஆதரவு: உறுதிப்படுத்தினார் ஜெய்சங்கர்!

இலங்கைக்கு இந்தியா ஆதரவு: உறுதிப்படுத்தினார் ஜெய்சங்கர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: 'இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்' என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி தெரிவித்துள்ளார்.இலங்கையில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆட்சியைப் பிடித்தார். அவரை இன்று காலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் சந்தித்து பேசினார்.இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:அதிபர் அனுரா குமார திசநாயகேவை சந்தித்தேன். இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்தும் ஆலோனை நடத்தினோம். இலங்கையின் பொருளாதார மறுகட்டமைப்பிற்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை அளிக்கும் என்பதை உறுதிப்படுத்தினேன்.இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் ஹரிணி அமரசூர்யா, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அந்நாட்டு அமைச்சர்கள், துாதர்கள், அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
அக் 05, 2024 16:31

எல்லா பிட்டையும்.பிட்டு வெப்போம். ஜெயிச்சா நம்ன ராஜதந்திரம். புட்டுக்குச்சுன்னா அவிங்க நம்பிக்கை துரோகம். இதுதான் சர்வதேச அரசியல்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 04, 2024 20:54

இலங்கைக்கு இந்தியா ஆதரவு .......... ஆனால் இலங்கையோ சீனாவுக்கு ஆதரவு .........


Ramesh Sargam
அக் 04, 2024 20:49

தமிழக மீனவர்கள் பிரச்சினையை பற்றியும் பேசி அந்த தொடர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவு கண்டிருக்கலாம். தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பேசினாரா.....?


அப்பாவி
அக் 04, 2024 20:18

சீனாவுக்கு எதிர்ப்பு என்று பொருள் காண்க.


Sunmohan
அக் 04, 2024 19:31

நட்பு ரீதியாக இருந்தாலும் அண்டை நாடாக இருந்தாலும் நமது சுயமரியாதையை இழந்து விட கூடாது சங்கர்.


chennai sivakumar
அக் 04, 2024 19:20

முதலில் நம் நாட்டு மீனவர்களை காப்பாற்றுங்கள். அப்புறம் இலங்கையை காப்பாற்றலாம்


தமிழ்வேள்
அக் 04, 2024 20:01

கள்ள கடத்தல் செய்பவன் மற்றும் கடற்படை வீரரை கொல்பவர்களுக்கு எதற்கு அரசின் ஆதரவும் பரிவும்? தங்களின் மொதலாளி கிங் கெமிக்கல்ஸ் வகையறாக்களை ஜெகத்து மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து பார்க்கலாமே?


பாலா
அக் 04, 2024 21:56

நம் நாட்டு மீனவர்கள் விதி மீறாவிட்டால் பிரச்சனையே இல்லை. கைவலி தீராதபோது கால் வலிக்கு வைத்தியம் பார்க்ககூடாதா? நீங்கள் கூறுவது அப்படி தான் உள்ளது.


sundarsvpr
அக் 04, 2024 19:20

நரேந்திரன் தலைமையில் திறமையான அமைச்சர்கள் உள்ளனர். உள்நாட்டில் மத்தியில் கருத்து முரண்பாடுகொண்ட ஆட்சிகள் உள்ளன. இதுதான் சவால். இதனையும் ஒரு குடையில் கொண்டுவர நரேந்திரன் அரசால் மட்டும் முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை