மேலும் செய்திகள்
6.4 ரிக்டர் நிலநடுக்கம் பெரிய பாதிப்பு இல்லை
04-Nov-2025
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் நேற்று முன்தினம் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட நிலையில், 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்கின்ற ன; சுனாமியும் தாக்குகிறது. கடந்த மாதம் இந்தோனேஷியாவின் மலுகு மாகாணத்தில் அமைந்துள்ள பாண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றும் அதே மாகாணத்தின் செராம் தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. நி லநடுக்கம், 6.0 ரிக்டர் அளவுக்கு பதிவானதை ஜெர்மனி புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பூமிக்கு அடியில், 136 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஆழமாக ஏற்பட்டதால் சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
04-Nov-2025