உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விலைபோகாத விமான நிறுவனம்: அதிர்ச்சியில் பாக்.,

விலைபோகாத விமான நிறுவனம்: அதிர்ச்சியில் பாக்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தான், அரசு கட்டுப்பாட்டில் உள்ள விமான நிறுவனத்தை தனியார்மயமாக்க ஏலம் நடத்தியது. அதில், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. ஐ.எம்.எப்., உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமும், நட்பு நாடுகளிடமும் கடன் வாங்கி சமாளித்து வருகிறது. கடன் கொடுப்பதற்காக சர்வதேச அமைப்புகள் பல நிபந்தனைகளை விதித்துள்ளன. அதில் நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டும் என்பன அடங்கும்.அதன்படி, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனை பராமரிக்க போதுமான நிதியில்லை. இதனையடுத்து இந்த விமானத்திற்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.இதனால், இந்த விமான நிறுவனத்தின் 51 முதல் 100 சதவீத பங்குகளை விற்க போவதாக அரசு அறிவித்தது. இதற்காக ஏலம் நடத்தி பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 85 பில்லியன் ரூபாய் திரட்ட அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இதற்கான ஏலம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்தது. அதில் 60 சதவீத பங்குகள் 10 பில்லியன் ரூபாய்(பாகிஸ்தான் மதிப்பில்) மட்டுமே ஏலம் கேட்கப்பட்டது. இந்த ஏலத்தில் பங்கேற்க 6 நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியிருந்த போதிலும், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று மட்டுமே பங்கேற்றது.அதிர்ச்சி அடைந்த அரசு அதிகாரிகள், ஏலத்திற்கான குறைந்தபட்ச தொகையையாவது அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venugopal s
நவ 02, 2024 11:16

இங்கு அதானி, அம்பானி என்று இருப்பது போல் அங்கு மத்திய அரசுக்கு செல்லப் பிள்ளைகள் இல்லை போல் உள்ளது!


R K Raman
நவ 02, 2024 14:42

இந்த செல்லப் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தது யார் என்று தெரியுமா? இப்போது கூட புள்ளி கூட்டணி ஆளும் மாநிலங்களில் அதானிதான் ஒப்பந்ததாரர்கள். ஒன்றுமில்லாதவர்கள் குறுகிய காலத்தில் ஆசிய பணக்காரர் ஆனார்கள் என்றால் பெரிய தொழில் அதிபர்கள் வளர்ச்சி கண்டு துடிக்க வேண்டாம்


Duruvesan
நவ 03, 2024 15:20

என்ன மூர்க்ஸ் எரியுதா?


N Sasikumar Yadhav
நவ 02, 2024 11:05

விமான கம்பெனியுடன் இசுலாமிய பயங்கரவாதிகளும் என சொல்லிப் பாருங்கள் ஹமாஸ் ஹுசுபுல்லா பயங்கரவாதிகள் வாங்கி கொள்வார்கள்.


தமிழ்வேள்
நவ 02, 2024 10:29

எங்க ஊரு சிவகங்கை அப்புச்சியை அனுப்பி தர்றோம்.. மொத்தமாக ஊத்தி மூடிடுவாரு...


visu
நவ 02, 2024 09:04

எந்த ஒரு நிறுவனத்தையும் அரசு நடத்த முயன்றால் அதிக ஊதியம் மற்ற ஆடம்பர செலவுகள் காரணமாக நட்டத்தில் முடியும் இதை சரிசெய்ய மீண்டும் மீண்டும் மக்கள் வரிப்பணம் அவைகளுக்கு வழங்கி மக்களை மேலும் வரி சுமைக்கு ஆளாக்குவார்கள் .அரசு நிறுவங்கள் அனைத்தும் தனியார் மயமாக்க படவேண்டும் அப்பத்தான் அவை லாபத்தில் இயங்கும் தனியார் முதலாளிகள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்


Vijay D Ratnam
நவ 01, 2024 22:58

பாகிஸ்தான் விமான நிறுவனத்தை கட்டுமர கம்பெனி அல்லது கேடி பிரதர்ஸ் ஏலம் எடுக்கலாமே. அவர்களுக்கு இது சொம்மா ஜுஜுபி. 85 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் என்றால் ஜஸ்ட் அரை பில்லியன் 56 கோடி அமெரிக்க டாலர்தான். பிசாத்து காசு. வாங்கி போடலாம்ல.


Ganesun Iyer
நவ 01, 2024 22:07

சமத்துவம், சகோதரத்துவம் ன்னு கம்பி கட்ற காலம் மலையேற போவுது...


கிஜன்
நவ 01, 2024 22:02

அந்த ஊர்ல ஒரு டாடா இல்லாமலா போவாங்க ?


Shekar
நவ 02, 2024 08:38

தம்பி டாட்டாவுக்கு அதை வாங்கவேண்டும் என்ற லட்சியம். அது அவருடைய சொத்து, காங்கிரஸ் அரசு கபலிகரம் செய்தது. கை விட்டுப்போன பூர்வீக வீட்டை லட்சியத்துடன் சிலர் மீட்பர். அதையேதான் டாட்டா செய்தார், உன் நினைப்புபோல ஏமாந்து வாங்கவில்லை


KRISHNAN R
நவ 01, 2024 21:51

இவர்கள்,, அமெரிக்க,...இரக்கத்தில்.....பாதி....அண்டர் கிரவுண்ட்.... வேலை செய்தனர். தற்போது. அது குறைந்துவிட்டது. இப்போ பிற நாடுகளிடம்..கையேந்தல்...


ஆரூர் ரங்
நவ 01, 2024 21:51

நமது ஏர் இந்தியாவைக் கூட டாடா தவிர வேறு யாரும் நியாயமான விலை பேச வரவில்லை. டாடா கூட தான் முன்பு நடத்திய பழம் பெருமையைக் காப்பாற்றவும் தேசபக்தியாலும் ஒரிஜினல் மதிப்பை விட பன்மடங்கு கொடுத்து பெற்றுக் கொண்டது. ஆக அரசு அத்தியாவசியமற்ற தொழில் செய்வது நாட்டுக்குக் கெடுதல்.ஏழைகளின் வரிப்பணத்துக்குக் கேடு .


Ramesh Sargam
நவ 01, 2024 21:50

அப்படியும் அங்குள்ள அரசு தீவிரவாதிகளை தீனிபோட்டு வளர்க்கிறார்கள். பாகிஸ்தானில் தீவிரவாதம் , தீவிரவாதிகள் ஒழிந்தால் ஒழிய, நாடு உருப்பட வாய்ப்பே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை