உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

டெஹ்ரான் : இஸ்ரேல் மீது ஈரான் எந்நேரமும் போர் தொடுக்கலாம் என எச்சரித்த நிலையில் இன்று(ஏப்.,14) காலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை துவக்கியது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையேயான போராக எந்த நிமிடமும் வெடிக்கலாம் என அமெரிக்கா எச்சரித்தது. நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவும் வகையிலும், அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளை பாதுகாக்கவும், கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பி வைத்து களத்தில் குதிக்க தயாராகி உள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர், கடந்தாண்டு அக்டோபரில் துவங்கியது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் கடும் சேதமும், அதிக உயிர் பலியும் ஏற்பட்டுள்ளன.

வான்வழி தாக்குதல்

இந்த போரில், பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, சில மேற்காசிய நாடுகளும் களத்தில் குதித்தன. இந்த நாடுகள் நேரடியாக களத்தில் இறங்காமல் ஹவுதி, ஹொஸ்பெல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளை களத்தில் இறக்கின. யூதர்களின் நாடாக கருதப்படும் இஸ்ரேலுக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் இடையேயான போராக, ஒரு கட்டத்தில் இது உருவெடுத்தது.ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, லெபனானில் இருந்து இயங்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹொஸ்பெல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது; இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது.அந்த வகையில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஹொஸ்பெல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து, இஸ்ரேல் சமீபத்தில் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது.

பதற்றம்

இந்த தாக்குதல்களின்போது, டமாஸ்கசில் உள்ள ஈரானின் துாதரகத்தின் மீதும் சில ஏவுகணைகள் விழுந்தன. இதில், ஈரான் ராணுவத்தின் உயரதிகாரிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்தது; கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியது. இதையடுத்து, மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் உருவானது.இந்த சூழ்நிலையில், தன் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ''இஸ்ரேல் மீது ஈரான் எந்த நிமிடத்திலும் தாக்குதல்களை நடத்தலாம்,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.தன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவவும், அந்த பிராந்தியத்தில் உள்ள தன் படைகளை பாதுகாக்கவும், கூடுதலாக இரண்டு போர்க் கப்பல்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

சரக்கு கப்பல் சிறைபிடிப்பு

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், வளைகுடா பகுதியில் சென்ற, இஸ்ரேலுக்கு சொந்தமான 'எம்.சி.எஸ்.ஏரிஸ்' என்ற சரக்கு கப்பலை, ஈரான் படை சிறைபிடித்துள்ளது. இந்த கப்பலில் இருப்பவர்களில், 17 பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. 'இந்த பிராந்தியத்தில் தேவையில்லாத பதற்றத்தை ஈரான் உருவாக்கி வருகிறது. நிலைமை மோசமடைந்தால், அதற்காக ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரானை தவிர்த்த விமானங்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், ஈரான் வான்வழியை, 'ஏர் இந்தியா' உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்கள் தவிர்த்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு செல்லும் விமானங்கள், மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதனால், பயண நேரம் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் வரை அதிகமாவதாக கூறப்படுகிறது. பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும், மேற்காசிய நாடுகளுக்கு பயணம் செய்வது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து உள்ளன.இந்நிலையில் இன்று(ஏப்.,14) ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் படைத்தளம் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ராணுவம் ஈரான் ட்ரோன்களை இடைமறித்து தாக்கி வருகிறது.இரு நாடுகளுக்கு இடையே ஏவுகணை தாக்குதல் நடந்து வரும் சூழலில் ஈராக், ஜோர்டான், லெபனான் நாடுகள் தங்களது வான் எல்லை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rajathi Rajan
ஏப் 14, 2024 12:42

இங்கு கருத்து சொல்லும் சங்கிகள் அனைவரும் அவர்கள் வீட்டில் அடுத்தவனை வந்து தங்க விடுவார்கள், அடுத்தவன் அவர்கள் வீட்டில் வந்து தங்கி குடும்பம் நடத்தினாலும் வருத்தப்பட மாட்டார்கள், அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒண்ணுதாகும்


Pandi Muni
ஏப் 14, 2024 17:04

சரிதான், இங்கே இடமளித்திருக்க கூடாதுதான்


Kumar Kumzi
ஏப் 14, 2024 12:04

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்


தமிழ்வேள்
ஏப் 14, 2024 11:48

மூளையை அடகு வைத்த மூர்க்க மத கும்பல் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு ஐ த்தேடி மேலே கூடியவிரைவில் போய்ச் சேர்ந்துவிடும்ஆம்பூர் பிரியாணிக்கு வழியின்றி திராவிட கும்பல் ஙே என்று முழித்து கொண்டு நிற்கும் ரொம்ப டமாஸ் ஆக இருக்கும்


தமிழ்வேள்
ஏப் 14, 2024 11:43

ஈரான் ஒரு ஷியா பிரிவு முஸ்லிம் நாடு என்பதால் சன்னி முஸ்லிம் நாடுகள் இந்த சண்டையை சட்டை பண்ண மாட்டார்கள் 1400 ஆண்டுகளாக உலக அளவில் வன்முறை வாழ்க்கை முறையை முன்னெடுக்கும் பழமைவாத மதத்தின் முடிவு விரைவில் வரும் இதுகளின் அக்கப்போரை ஒரு முடிவுக்கு கொண்டு வர இதைத்தவிர வேறு வழி இல்லை


Rpalnivelu
ஏப் 14, 2024 11:19

இஸ்ரேல் கடவுளின் தேசம் அதை சீண்டுவது என்பது கடவுளை சவாலுக்கு அழைப்பது போலத்தான் ஈரானிய அரசாங்கம் ஒழிந்து நல்ல மக்களாட்சி மலர வாழ்த்துக்கள்


Kasimani Baskaran
ஏப் 14, 2024 10:23

ஈரான் விரைவில் பொட்டல்க்காடாக வாய்ப்பிருக்கிறது இரஷ்யா உக்ரேனில் பிசியாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் அடி அதி பயங்கரமாக இருக்கும் ஈரானுக்காக சீனாவும் வராது


K.Muthuraj
ஏப் 14, 2024 09:54

இதுவரை இஸ்ரயேலுக்கு எதிராக தங்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை என்று ஹமாஸ் மற்றும் ஹெஸ்போலா இயக்கத்தினருக்கு இரான் மேல் கோபம் உண்டு அந்த நிர்பந்தத்தினாலும் இஸ்ரேல் மேல் ஈரான் குண்டு வீசியாக வேண்டிய கட்டாயம் வெட்டியாய் குண்டுகளுக்கு தான் சேதம் இதில் எரிச்சல் என்னவென்றால் ஈரானியர்கள் சாலைகளில் இந்த சந்தோசத்தை கொண்டாடினார்களாம் ஒருபடி தாண்டி சிந்திக்க மாட்டார்கள் போலும் ஏற்கனவே அமெரிக்கா ஈரான் மேல் எங்கு எங்கு குண்டு போட வேண்டும் என்பதை பிளாட் செய்து கொடுத்து விட்டார்கள் வாய்ப்புக்காக காத்திருந்தார்கள் அவ்வளவே


Duruvesan
ஏப் 14, 2024 09:23

பெண்களை கொன்ற இராணிய மூர்க்க நாடு விரைவில் அழிய வாழ்த்துக்கள்


NAGARAJAN
ஏப் 14, 2024 08:56

எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா இந்த அமெரிக்கா எனும் நச்சுப் பாம்பு தானே


Kasimani Baskaran
ஏப் 14, 2024 10:26

தீவிரவாதம் செய்தது ஹமாஸ் அதற்கு ஆதரவு கொடுக்க கட்டுப்பாடில்லாத தீர்விரவாதக்குழுக்கள் மூலம் மறைமுகமாக ஈரான் போன்ற நாடுகள் இஸ்ரேலை அழிக்கிறேன் என்று ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள்


Palanisamy Sekar
ஏப் 14, 2024 08:20

பசியிலும் நோயிலும் வாடுகின்ற குழந்தைகளின் பெண்களின் நலன் கருதி போர் தடுத்து நிறுத்தியிருக்க ஐ நா முன்வந்திருக்க வேண்டும் அங்கேயும் கூட அரசியலோ என்றுதான் தோன்றுகின்றது தீவிரவாதிகளை தீவிரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாட்டுக்கும் இந்தியா ஒருபோதும் ஆதரவை கொடுக்காது என்கிற நிலைப்பாட்டில் இந்தியா பார்வையாளராகவே இதில் செயல்பட முடியும் மீண்டும் எண்ணெய்விலையை எல்லா அரபு நாடுகளும் இந்த காரணத்தை வைத்து ஏற்றும்உலக பொருளாதாரமும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் ஈரான் செயல் கண்டிக்கத்தக்கது மண்ணின் பாவங்கள் இந்த தீவிரவாதம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி