உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொது இடத்துல பாட்டு பாடியது ஒரு குத்தமா?: கைது செய்யப்பட்ட ஈரானிய பெண்

பொது இடத்துல பாட்டு பாடியது ஒரு குத்தமா?: கைது செய்யப்பட்ட ஈரானிய பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெஹ்ரான்: பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய பெண் ஈரானில் கைது செய்யப்பட்டார்.ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம். ஹிஜாப் அணியாமல் பொது இடத்திற்கு வரும் பெண்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும் அளவிற்கு அங்கு சட்டம் உள்ளது. அந்த வகையில், ஜாரா எஸ்மெய்லி என்ற பெண் ஒருவர், தெஹ்ரான் தெருக்களில் அவ்வப்போது பாடல் பாடும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இவர், மெட்ரோ ரயில், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல் பாட்டு பாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.இஸ்லாமிய மக்கள் மீதான அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான ஒரு வகையான எதிர்ப்பாக இது பார்க்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். ஈரானில் இதுபோன்ற நிகழ்வு புதிதல்ல. இதற்கு முன்னதாக பெண் சுதந்திரம் பற்றிய பாடல் எழுதியதற்காகவும், அந்நாட்டு அரசு மற்றும் சமூக பிரச்னைகளை விமர்சித்து பாடல் எழுதியதற்காகவும் கூட கலைஞர்களை கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

J.V. Iyer
ஆக 08, 2024 16:57

சீக்கிரம் அங்கும் உள்நாட்டுக்கழகம் வெடிக்கும். எவ்வளவுநாள் தான் மக்கள் பொறுத்துக்கொண்டு போவார்கள்?


அப்பாவி
ஆக 08, 2024 16:11

என்ன செய்யறது? ஆம்பளையா இருந்தா ராஇ வளர்க்கலைன்னு கைது பண்ணியிருப்பாங்க.


ram
ஆக 08, 2024 15:18

ரொம்ப முக்கியம் உங்கள் ஆட்கள் பெண்களேதேஷில் ஹிந்துக்களை படுகொலை செய்கிறார்கள் அதை பத்தி கொஞ்சம் கவலை படுங்கள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 08, 2024 15:15

புள்ளி வைத்த இண்டி கூட்டணி கட்சிகளுக்கு நண்பர்கள் இவர்கள்


Sankare Eswar
ஆக 08, 2024 15:06

முட்டாளத்தான் இருப்பானுங்க போல.


Duruvesan
ஆக 08, 2024 14:13

பெண்களை அடிமைகளாக நடத்தும்...


Natesan B
ஆக 08, 2024 13:49

ஈரானைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் என்னுடன் நோர்வேயில் வேலை செய்கிறார்கள், அவர்கள் ஒருபோதும் மதத்தைப் பின்பற்றுவதில்லை


sridhar
ஆக 08, 2024 13:43

ஆண்களுக்கு பல சலுகைகள், பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் … இதை எதிர்த்து இங்கே திராவிட விஷங்கள் எந்த கருத்தும் சொல்லாது .


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 13:39

ஒரு ஈரானியச் சிறுமி ஹிஜாப் அணியாததால் தாக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த செய்தி நினைவிருக்கலாம் ....


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 13:38

பல ஆண்களும் பெண்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி நாத்திகர்களாக ஆகிறார்கள் ...... இணையத்தில் ஆதாரங்கள் உண்டு .......


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை