உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: சிரியாவில் 15 பேர் பலி

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: சிரியாவில் 15 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டமாஸ்கஸ்: இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் சிரியாவில் 15 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த நாடுகளில் அந்த அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியில் இரண்டு இடங்களில் இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்படும் ஜிகாதி அமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
நவ 15, 2024 05:24

சிரியாவில் இருந்து ஓடிப்போனவர்கள் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையை அதிகரிக்க கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே இஸ்ரேல் சட்டம் இல்லாமல் அல்லல்படும் சிரியாவை பிடித்து வைத்துக்கொள்ளலாம்.


user name
நவ 15, 2024 17:44

நீங்கள் போய் விளக்கு பிடியுங்கள்


சமீபத்திய செய்தி