உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 274 பேர் பலி

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 274 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட்: லெபனானில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வெளி தாக்குதலில் 2740க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தாக்குதல் நடத்துவதற்கு சிறிது நேரம் முன்னதாக, இஸ்ரேலில் இருந்து அனைத்து லெபனான் போன் இணைப்புகளுக்கும் அழைப்பு வருகிறது.அதில், நீங்கள் இருக்கும் கட்டடம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளது உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுகின்றனர்.இன்று ஒரே நாளில் மட்டும் 80 ஆயிரம் போன் அழைப்புகள் இஸ்ரேலில் இருந்து லெபனான் தலைநகரப் பகுதிக்கு வந்ததாக, அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் இத்தாக்குதலை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் நஜீப் மிகாதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற நாடுகளை கேட்டுகொண்டுள்ளார்.கல்வி அமைச்சர் கூறியதாவது: பாதுகாப்பற்ற இந்த சூழ்நிலையில், தெற்கு லெபனான் துணைப்பகுதிகள் மற்றும் பேக்கா பள்ளத்தாக்கில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்கள் மூடப்பட்டன.தகவல் தொடர்பு அமைச்சர் கூறுகையில், எங்களுக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் அரசு கட்டடங்களை விட்டு வெளியேறுங்கள் என்று தெரிவித்தனர். நாங்கள் எங்கள் பணிகளை தொடருகிறோம். அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களிலிருந்து வெளியேற மாட்டோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kumar Kumzi
செப் 23, 2024 21:25

காட்டேரிகளுக்கு இஸ்ரேல் மூலம் தண்டனை வழங்குகிறார் இஸ்ரேல் வாழ்க


Skn
செப் 23, 2024 20:18

No country has the present technics and planning as that of Isreal and very adamant in taking revenge. Lebanon will cease to exist


Barakat Ali
செப் 23, 2024 20:10

சொல்லியடிப்பேன் ன்னு சொல்லுவாங்களே .... அதானா இது ??


Nandakumar Naidu.
செப் 23, 2024 18:20

தீவிர வாதிகள், சமூக விரோதிகள்,தேச விரோதிகள் மற்றும் மத வெறி பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் எங்கு இருந்தாலும் மண்ணோடு மண்ணாக அழிக்க வேண்டும்.


Kasimani Baskaran
செப் 23, 2024 17:57

வீரமாக நினைத்து ஈரான் பேச்சை கேட்டு ராக்கெட் விட்டால் இஸ்ரேல் சும்மா விடுமா என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இதுகளால் அப்பாவி மக்கள்தான் சாகிறார்கள்.