உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹெஸ்பொல்லா முகாம்கள் தகர்ப்பு

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹெஸ்பொல்லா முகாம்கள் தகர்ப்பு

காசா ; காசாவில், உணவகம் மற்றும் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேல் மோதல் நடக்கிறது. இதில், காசாவில் பெண்கள், குழந்தைகள் என, 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ், ஹெஸ்பொல்லா அமைப்புகளின் முக்கிய தளபதிகளை சுட்டுக் கொன்றது. இந்த அமைப்புகளுக்கு ஆதரவாக, ஈரானும் களத்தில் குதித்து இஸ்ரேலை தாக்கியது. பதிலுக்கு, இஸ்ரேலும் ஈரானை தாக்கியது. மும்முனை தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்கிறது. நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது 90 ராக்கெட்டுகளை வீசி ஹெஸ்பொல்லா தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லெபனானின் பெய்ரூட்டில் உள்ள தஹியே என்ற பகுதியில், இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஹெஸ்பொல்லாவின் முகாம்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதே போல், காசாவின் முவாசி என்ற பகுதியில் உள்ள உணவகம் மீது, இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, மத்திய காசாவில் அகதிகள் முகாமில் உள்ள வீட்டில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில், பெண் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் - ஹமாஸ், ஹெஸ் பொல்லாமோதலால், மேற்காசிய பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை