உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 15 மாத காசா போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல், ஹமாஸ் ஒப்பந்தம்: உறுதிப்படுத்தினார் பைடன்

15 மாத காசா போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல், ஹமாஸ் ஒப்பந்தம்: உறுதிப்படுத்தினார் பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பிணைக்கைதிகளை விடுவிப்பதன் மூலம் காசாவில் 6 வார போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023ம் ஆண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.இதையடுத்து துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர், 15 மாதங்களாக நீடித்து வந்தது. காசாவில் 46,000 பேர் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் கடந்த சில மாதங்களாக முயற்சித்து வந்தன.காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை நிறுத்த ஹமாஸ் - இஸ்ரேல் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: காசாவில் இதுவரை 46,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற 15 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.ஆறு வாரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினரை முறையாக திரும்பப் பெறுவது மற்றும் அந்தந்த தரப்பினரால் பிணைக் கைதிகளை பரிமாறிக்கொள்வது ஆகியவை அடங்கும். போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. .ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் பிணைக் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆறு வாரங்களில், இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடக்கும். இது போர் நிறுத்தத்திற்கான இறுதி முடிவு. இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sridhar
ஜன 16, 2025 19:41

பைடன் என்னத்த செஞ்சாரு? நான் பதவி ஏற்குமுன் ஹமாஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லையென்றால், நடப்பதே வேறன்னு டிரம்ப் போட்ட அதிரடில பயந்து போயி கையெழுத்து போட்டுருக்காங்க. போர் நடந்திட்டே இருந்தாதான் தீவிரவாதிகளுக்கு லாபம், அவுங்கள ஆட்டிவைக்கிறவங்களிடமிருந்து நிதிகள் வந்த வண்ணம் இருக்கும், இவர்களும் மக்களை கேடயமாக பயன்படுத்தி சொகுசாக வாழ்க்கையை நடத்தலாம். பாவம் இப்போ அது முடியாது என்றாலும், மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு ஆயுத்தம் ஆவார்கள்.


djivagane
ஜன 16, 2025 14:30

டிரம்ப்புக்கு நன்றி


AMLA ASOKAN
ஜன 16, 2025 11:16

ஒரு குடும்பத்தில் ஒரு வயதான ஒருவர் தள்ளாத வயதில் இறந்து விட்டால் அதை தாங்கிக்கொள்ள முடியாத துக்கம் தொண்டையை அடைத்துக்கொள்கிறது. ஆனால் இந்த போரில் பலஸ்தீனியர் தரப்பில் குழந்தைகள், இளைஞர்கள், அப்பாவி மக்கள் என 45000 பேர் குண்டு வீச்சின் மூலம் துடிதுடித்து உயிர் விட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஒரு சாதாரண சம்பவமாக கருதப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் முஸ்லிம்கள். அதைத்தான் ஒரு உயிருக்கு நூறு உயிர் என்ற அடிப்படையில் அந்த முஸ்லிம்கள் லட்ச கணக்கில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என சிலர் விரும்புகின்றனர் . என்ன மனிதநேயம் . 1948க்கு முன் வெறும் 500 சதுர கிலோமீட்டர் கொண்ட இஸ்ரேல் என்ற சிறிய நாடு, இன்று அண்டை அரபுநாடுகளின் 8000 சதுர கிலோமீட்டர் கிலோ மீட்டர் நிலத்தை அபகரித்து, கோடிக்கணக்கான அரபு மக்களை வெளியற்றி ஒரு பெரிய நாடாக மாறிவிட்டது. இதை எதிர்த்து தான் ஹமாஸ் போன்ற அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் ஆதரவுடன் இஸ்ரேலிய பிரதமர்கள் எவ்வித உடன்படிக்கைக்கும் ஒத்துவராமல் போரை தொடர்கிறார்கள் . இஸ்ரேலிய மக்கள் இந்த அரசின் போக்கை விரும்பாமல் அரசி எதிர்த்தும், பல்லாண்டுகளாக பதட்டத்துடன் நிம்மதியிழந்தும், வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்தும் வருகின்றனர். இன்று இஸ்ரேலிய பொருளாதாரம் பெருமளவில் சரிந்து உள்ளது. மேலும் உக்ரைன் , இஸ்ரேல் போர்களினால் உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது .


Venugopal Gopalsamy
ஜன 16, 2025 13:10

you ஆர் எ பானட்டிக் muslim.


பேசும் தமிழன்
ஜன 16, 2025 13:36

உங்கள் மதம் தோன்றி 1400 ஆண்டுகள் ஆகிறது.... யூத மதம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே இருக்கிறது.. அப்போ சொல்லுங்கள்... யார் நிலத்தை யார் ஆக்கிரமித்து இருப்பார்கள் என்று.. மார்க்க ஆட்களின் நடத்தைக்கு வேறு உதாரணம் வேண்டாம்.. நமது நாட்டின் காஷ்மீர் மாநிலத்தை எடுத்துக் கொள்வோம்.. பண்டிட் சமூக மக்களின் உடைமைகளை பறித்தது கொண்டு. அவர்களை உள்நாட்டிலேயே அகதிகளாக விரட்டி அடித்தவர்கள்..... இஸ்ரேல் இழந்த உடைமைகளை மீட்க போராடி கொண்டு இருக்கிறார்கள்.


ஆரூர் ரங்
ஜன 16, 2025 14:17

வரலாற்றில் பாலஸ்தீனம் என்ற நாட்டை யார் ஆண்டார்கள்? அது வெறும் உருவகம். ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேல் எனும் தேசம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கிலாபத் இயக்கம் மூலம் உலகத்தையே இஸ்லாமியமயமாக்கி ஒரே நாடாக ஆக்க முயன்றதால் மற்றவர்கள் எதிரிகளாகிவிட்டனர். தாலிபான், அல் கொய்தா, ஐ எஸ் எனும் வகாபிகள் எல்லாமே அந்தக் கனவில் உள்ளவரை அமைதி திரும்பாது.


AMLA ASOKAN
ஜன 16, 2025 15:36

உலக வரைபடத்தை வேண்டுமென்றால் நில ஆக்கிரமிப்பிக்குப்பின் மாற்றி அமைக்க முடியும் . ஆனால் பதிவு செய்யப்பட்ட உலக வரலாற்றை மதஅடிப்படையில் மாற்றி அமைக்க முடியாது . என்பதற்கு இஸ்ரேல் ஒரு உதாரணம் . பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பலஸ்தீனிலிருந்து 14-05-1948 ஆம் நாள் தான் இஸ்ரேல் என்ற நாட்டை டேவிட் பின் குரியன் என்பவர் உலகுக்கு அறிவித்தார் . அந்த நாட்டை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்து முதலில் அங்கீகரித்தவர் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரூமன் . அன்றைய யூதர்களின் எண்ணிக்கை 8 லட்சம் . இன்று இஸ்ரேலின் அபாண்ட ஆக்கிரமிப்பிற்கு பின் அது 1.10 கோடியாக உயர்ந்துள்ளது . இந்த வரலாற்று உண்மையை உலகில் உள்ள அனைவரும் நன்கு அறிவர் .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 16, 2025 08:08

அமெரிக்க உதவியோடு போரிடணும் ...... அமெரிக்கா நிறுத்தச் சொன்னா நிறுத்தணும் .....


அப்பாவி
ஜன 16, 2025 07:15

15 மாசமா இஸ்ரேலுக்கு ஆயுதம் வித்தாச்சு. இன்னிக்கி பதவி முடிய மூணு நாள் இருக்கையிலே போர் நிறுத்த பாடுபடுகிற பாஷண்டி பைடன்.


Kasimani Baskaran
ஜன 16, 2025 07:09

என்ன ஒரு அக்கிரமம்... ஹமாஸை முடித்துவைக்காமல் பாக்கி வைப்பது பின்னாளில் திரும்பவும் அவர்கள் பிரச்சினை செய்ய வாய்ப்பிருக்கிறது. ஒரு உயிருக்கு நூறு உயிர் என்ற அடிப்படையில் எடுத்திருக்க வேண்டிய இஸ்ரேல் ஒன்றுக்கு ஐம்பது என்ற அளவை விட சற்று குறைவாகவே கொன்று இருப்பது ஆச்சரியம். தீவிரவாதம் என்கிற கோழைத்தனம் மனித குலத்துக்கே எதிரானது.


Bahurudeen Ali Ahamed
ஜன 16, 2025 11:50

ஆஹா என்ன ஒரு வக்கிரம், பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலியர்கள் போல் நிலத்தை அபகரிக்க போராடவில்லை அவர்களின் சுதந்திரத்திற்காக போராடினார்கள்


Kasimani Baskaran
ஜன 16, 2025 13:42

யார் நிலத்தை யார் அபகரித்தார்கள் என்பதை உலகமே அறியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை