உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதை செய்யாவிட்டால் போர் நிறுத்தம் வாபஸ்; ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

இதை செய்யாவிட்டால் போர் நிறுத்தம் வாபஸ்; ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: 'லெபனான் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் வாபஸ் பெறப்படும்' என ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது. அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முயற்சிகள் மேற்கொண்டன.இதன் படி, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே கடந்த நவம்பர் 27ம் தேதி போர் நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டது. அதன்படி தெற்கு லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் உடனடியாக ஆயுதங்களை களைந்து விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது, ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, இஸ்ரேல் ராணுவம் கூறியிருப்பதாவது: லெபனான் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் வாபஸ் பெறப்படும். வடக்கில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய விரும்புகிறோம். லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்த விரும்புகிறோம். இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bahurudeen Ali Ahamed
ஜன 09, 2025 12:01

பெரிய ராசு நீங்க சொல்லுங்க நில அபகரிப்பை ஆதரிக்கிறீர்களா இல்லையா பாகிஸ்தான் இந்திய நிலத்தை அபகரித்தது தவறு என்கிறீர்கள் நீங்கள் சொல்வது சரிதான் அதே நில அபகரிப்பை இஸ்ரேல் செய்வதும் தவறுதானே, இலங்கையில் இனவழிப்பு நடந்தது மாபெரும் தவறுதான் அதே இனவழிப்பை இஸ்ரேல் செய்வதும் தவறுதானே, ஆங்கிலேயன் நம்நாட்டை கைப்பற்றி ஆண்டபோது அவனை வெளியேறச்சொல்லி போராடியது சரியென்றால் பாலஸ்தீனியர்கள் செய்வதும் சரிதான், தனி முஸ்லீம் நாடு வேண்டுமென்று விரும்பியவர்கள் பாகிஸ்தானியர்கள் ஆனார்கள், ஆனால் நாங்கள் இந்தியனாகத்தான் வாழ ஆசைப்பட்டோம் இந்தியனாகவே இருப்போம் இறப்போம், வேற்றுமையில் ஒற்றுமை இதுதான் இந்தியா அதற்காகத்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருக்கிறது


Bahurudeen Ali Ahamed
ஜன 09, 2025 12:02

பெரிய ராசு நீங்க சொல்லுங்க நில அபகரிப்பை ஆதரிக்கிறீர்களா இல்லையா பாகிஸ்தான் இந்திய நிலத்தை அபகரித்தது தவறு என்கிறீர்கள் நீங்கள் சொல்வது சரிதான் அதே நில அபகரிப்பை இஸ்ரேல் செய்வதும் தவறுதானே, இலங்கையில் இனவழிப்பு நடந்தது மாபெரும் தவறுதான் அதே இனவழிப்பை இஸ்ரேல் செய்வதும் தவறுதானே, ஆங்கிலேயன் நம்நாட்டை கைப்பற்றி ஆண்டபோது அவனை வெளியேறச்சொல்லி போராடியது சரியென்றால் பாலஸ்தீனியர்கள் செய்வதும் சரிதான், தனி முஸ்லீம் நாடு வேண்டுமென்று விரும்பியவர்கள் பாகிஸ்தானியர்கள் ஆனார்கள், ஆனால் நாங்கள் இந்தியனாகத்தான் வாழ ஆசைப்பட்டோம் இந்தியனாகவே இருப்போம் இறப்போம், வேற்றுமையில் ஒற்றுமை இதுதான் இந்தியா அதற்காகத்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருக்கிறது


Bahurudeen Ali Ahamed
ஜன 06, 2025 15:34

பெரிய ராசு என்னே ஒரு புத்திசாலித்தனம், இஸ்ரேல்காரன் அவன் நிலத்திற்க்காக போராடவில்லை அவன் பாலஸ்தீனியர்களிடம் இருந்து அபகரித்த நிலத்தை தக்கவைத்துக்கொள்ள குழந்தைகளை பெண்களை கொன்று குவிக்கிறார்கள், இஸ்ரேலியர்கள் நிலத்திருடர்கள், பாலஸ்தீனியர்கள்தான் அவர்களின் நிலத்தை மீட்க போராடுகிறார்கள், இஸ்ரேலியர்கள் பாலஸ்தீன் என்ற நாடே இருக்கக்கூடாது என்று இந்த அட்டூழியத்தை செய்கிறார்கள்


பெரிய ராசு
ஜன 06, 2025 18:37

சரி அப்ப பாக்கிஸ்தான் இந்தியாவிடம் அபகரித்த நிலத்தை என்ன செயுதான் ? காஸ்மீர் பண்டிட்டிட் நிலை என்ன ? ஸ்ரீலங்காவில் தமிழ்மக்கள் கொத்து கொத்தாக செத்தபொழுது உங்க வாய் கை எங்கே போனது ? உங்க நிலை பிறகு இஸ்ரேலை நாட்டை விட்டு ஓடி விடு என்று சொல்லுறீங்களே , பாக்கிஸ்தான் , பங்களேஸ் எல்லாம் இஸலாமினா நாடாக பிரித்த பிறகு இந்திய ஏன் இந்துக்கள் நாடக பிரிக்க வில்லை ஏன் இந்த ஓரவஞ்சனை , பதில் உண்ட ?


JaiRam
ஜன 06, 2025 10:51

முழுவதும் அழியும் வரை போரே நிறுத்தாதீர்கள்


seshadri
ஜன 06, 2025 10:40

இந்த சம்பத் குமார் என்று ஒரு ஜந்து கருத்து போடுகிறதே அது மூர்க்க மார்க்கத்தை சேர்ந்ததா. மாற்று பெயரில் கருத்து போடுகிறதே.


N.Purushothaman
ஜன 06, 2025 09:19

ஒப்பந்தம் என்ன சொல்லியுள்ளதோ அதை இரு தரப்பும் கடைபிடிக்க வேண்டும் ...


Sampath Kumar
ஜன 06, 2025 09:00

இந்த இஸ்ரேல் கும்பல் தான் உலகின் முதல் பயங்கரவாதிகள். பயங்கரவாதம் இவர்களிடம் இதுதான் முதலில் தொடங்கியது கடவுளையே காட்டி கொடுத்த அய்யோக்கிய கும்பல் மனிதர்களையும் அவர்களின் உரிமைகளையும் நசுக்குவதில் வியப்பு ஒன்றும் இல்லை


பெரிய ராசு
ஜன 06, 2025 10:23

உன் குடும்பத்தினரிடம் அத்து மீறினால் நீ இருப்பையே ஓங்கோல் அடிமையே ...அவன் நாட்டை காப்பாற்ற அவன் போராடுறான் நீ கருதுங்கற பேருல தேவையல்லாம் பேசுறே


JaiRam
ஜன 06, 2025 10:50

மாவீரன் நெதனியாகு வாழ்க மூர்க்க தீவிரவாதிகளை வேற இருக்க வந்த கிருஷ்ண பரமாத்மா


N Sasikumar Yadhav
ஜன 06, 2025 11:04

இசுலாமிய பயங்கரவாதிகளை பற்றி பேசினால் கோபாலபுர கொத்தடிமை சொம்பத்கொமார் சார் கோபப்படுகிறாரே என்ன காரணம்


Pathmanathan Nackeeran
ஜன 06, 2025 14:15

சரியாக சொன்நீர்கள்


Laddoo
ஜன 06, 2025 08:39

இத்தீவிரவாதிகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு வார்னிங் சுட்டுக் கொல்வதுதான்.


சமீபத்திய செய்தி