உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பணியாளருக்கு சித்திரவதை: ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் நீதிமன்றம் அதிரடி

பணியாளருக்கு சித்திரவதை: ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் நீதிமன்றம் அதிரடி

ஜெனிவா: வீட்டு பணியாளர்களை சித்ரவதை செய்த வழக்கில், ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு ஸ்வீஸ் நீதிமன்றம், சிறை தண்டனை வழங்கி உள்ளது. இருவருக்கு 4.6 ஆண்டும், மற்ற இருவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியது.

குற்றச்சாட்டு

பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான கோபிசந்த் ஹிந்துஜா, வங்கி, எண்ணெய், வர்த்தகம் உட்பட பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவரின் சகோதரர்களில் ஒருவரான பிரகாஷ், ஹிந்துஜா குழுமத்தின் பல்வேறு பணிகளை கவனித்து வருகிறார். ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் சொகுசு மாளிகை உள்ளது. இங்கு பணியாற்றிய இந்திய பணியாளர்களை பிரகாஷ் ஹிந்துஜா (78), அவரின் மனைவி கமல் ஹிந்துஜா (75), மகன் அஜய், மருமகள் நம்ரதா ஆகியோர் கொத்தடிமை போல் நடத்தியதாகவும், அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததுடன், குறைந்த சம்பளம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் ஸ்வீஸ் நாணயத்தில் வழங்காமல், இந்திய ரூபாயில் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்க்க கட்டாயபடுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தண்டனை

இது தொடர்பான வழக்கு ஜெனிவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையில், ஆட்கடத்தல் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்திய பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கில், அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், பிரகாஷ் மற்றும் கமல் ஹிந்துஜாவுக்கு தலா 4.6 ஆண்டு சிறை தண்டனையும், அஜய் மற்றும் நம்ரதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட போது இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்புசாமி
ஜூன் 22, 2024 16:57

இந்தியாவா இருந்தா ஒரு கட்சிக்கு தேர்தல்.பத்திர நிதி குடுத்து தப்பிச்சிருக்கலாம்.


GMM
ஜூன் 22, 2024 14:39

இந்திய பணியாளர்களை ஸ்விசில் கொத்தடிமை போல் நடத்த ஹிந்துஜா வறுமைக்கு பிறந்தவர்கள் இல்லை. 18 மணிநேர வேலை குற்றச்சாட்டு பணம் பறிக்க ஜோடிக்கபட்டது. ஏராளமான பணியாளர்கள் பெரிய வீடுகளில் பணி செய்ய விரும்புவர். விசுவாசமாக இருந்தால் நல்ல பலன் உண்டு. கள்ள, கறுப்பு பணத்தை பாதுகாக்கும் சுவிஸ் நீதிமன்றத்தில் மனிதாபிமானம் முன் பணம் முக்கிய ஆதிக்கம் செலுத்தும். பிறந்த நாட்டை விட்டு விலகி பிழைக்க செல்பவர்கள் கவனம் தேவை.


தமிழ்வேள்
ஜூன் 22, 2024 13:13

இந்தியர்களுக்கும் அரேபியர்களுக்கும் உலகில் எங்கு போனாலும் , அடுத்தவனை அடிமையாக நடத்தும் மனோபாவம் மறைவது இல்லை - அரபிக்கு மனித அடிமைகள் இன்னும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக உள்ளது - இந்தியர்களுக்கு நடைமுறையில் மட்டும் உள்ளது . சட்டம் கண்டுகொளவதில்லை .அவ்வளவுதான் .....இந்த மாதிரி ஆட்களுக்கு கடும் உடல் உழைப்பு தண்டனை -


Anand
ஜூன் 22, 2024 12:39

கூடவே சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிடுங்கள், அது இருப்பதால் தான் மனித நேயம் என ஒன்று இல்லாமல் இந்த ஆட்டம். நம் நாட்டிலும் சில குடும்பங்கள் திருடி தின்று கொழுத்து திரிகிறது, ஆனால் அவைகளை நீதிமன்றத்தால் கூட கட்டுப்படுத்த முடியாது, அதுகளுக்கு இயற்கை தான் மிக கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.


Govindh Sharma
ஜூன் 22, 2024 12:35

லண்டன் குடியுரிமை பெற்றவர்கள் காங்கிரஸ்காரர்கள் இவர்களை விசாரித்த லட்சணம் உலகம் அறிந்தது எதுவும் நியாயமாக சம்பாதிக்கவில்லை மக்களின் பணத்தை கொள்ளையடித்த கொள்ளைக்காரர்கள் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு லண்டனில் மிகப்பெரிய செல்வந்தர்களாக வளம் வருபவர்கள் இந்தியாவில் கூட அசோக் லேலண்ட் கம்பெனியை வாங்கி உள்ளார்கள் இப்பொழுது தான் இவர்கள் குடும்பத்தில் விரிசலை தோன்றியுள்ளது


NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 22, 2024 11:46

பணம் இருந்தும் மனம் இல்லாத மனித ஜென்மங்கள்


Sampath Kumar
ஜூன் 22, 2024 11:42

ஒப்பற்ற நடைமுறை தத்துவம் இந்த கும்பல் தான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை