உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2ம் உலகப் போர் வீரர்களுக்கு ஜப்பானில் அஞ்சலி

2ம் உலகப் போர் வீரர்களுக்கு ஜப்பானில் அஞ்சலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து, 80 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த லட்சக்கணக்கான வீரர்களுக்கு ஜப்பானில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தலைமையில் இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட அணியும், பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் அணியும் மோதின. 1939ம் ஆண்டு துவங்கிய போர், 1945 வரை நீடித்தது. இதில் ஜப்பானை பணிய வைப்பதற்காக அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டை வீசியது. இறுதியாக ஜப்பான் 1945 ஆக.15ல் சரணடைந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி