உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பட்டதெல்லாம் போதும்; பயந்து ஓடினார் டிரம்ப்; விவாத அழைப்பு நிராகரிப்பு

பட்டதெல்லாம் போதும்; பயந்து ஓடினார் டிரம்ப்; விவாத அழைப்பு நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஜனநாயக கட்சியின் போட்டியாளரான கமலா ஹாரிசுடன் 2வது அதிபர் விவாதத்தில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துவிட்டார். முதல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் பல அமெரிக்க ஊடகங்கள் அறிவித்ததால், தற்போது டிரம்ப் நழுவி விட்டார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார்.இருவரும் முதன்முறையாக செப்., 11ல், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி., செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன. டிரம்ப் ஆதரவாளர்களே கமலா தான் வெற்றி பெற்றார் என்று கூறுகின்றனர்.

2வது விவாதம்

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியும், அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ், அக்டோபர் 23ம் தேதி குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்டு டிரம்புடன் 2வது விவாதத்தில் பங்கேற்க CNNன் அழைப்பை ஏற்றுக்கொண்டேன் என தெரிவித்தார். ஆனால், 'நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்கள் தயாராகி விட்டனர். 2வது விவாதம் மிகவும் தாமதமாகிவிட்டது' எனக் கூறி டிரம்ப் அழைப்பை நிராகரித்தார்.

நழுவினார் டிரம்ப்

'கமலாவை எளிதில் வெற்றி கொள்வேன் என தம்பட்டம் அடிக்கும் டிரம்ப், கமலாவை தாறுமாறாக விமர்சனம் செய்கிறார். 'இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப்படுத்துகிறார்' என்றும் கமலா பற்றி டிரம்ப் கூறியிருந்தார். முதல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் பல அமெரிக்க ஊடகங்கள் அறிவித்ததால், தற்போது டிரம்ப் பயந்து நழுவி ஓடிவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R Kay
செப் 22, 2024 16:58

டிரம்ப் ஜெயித்தால், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் நல்லது. ஹாரிஸ் நம் திதியைப்போல தான். மெக்ஸிகோ மற்றும் எல்லை பகுதி ஊடுருவலை ஊக்குவித்து அவர்கள் வோட்டில் ஜெயித்து சொந்த நாட்டிற்கே சூனியம் வைப்பார்.


Ramanujan
செப் 22, 2024 12:32

கமலா ஜெயிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவங்க எப்பவுமே pro Pakistan தான்


P. VENKATESH RAJA
செப் 22, 2024 10:01

டிரம்புக்கு தேவை தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை