உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க குற்றச்சாட்டு எதிரொலி: அதானியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா

அமெரிக்க குற்றச்சாட்டு எதிரொலி: அதானியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நைரோபி: அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை கென்யா ரத்து செய்துள்ளது.கென்யாவில் விமான போக்குவரத்து துறையில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக அதானி நிறுவனத்துடன் கென்யா ஒப்பந்தம் போட்டு இருந்தது. மேலும் மின்சார விநியோகம் தொடர்பாகவும் அந்நிறுவனத்துடன் 736 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சகம் ஒப்பந்தம் போட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5y30ux69&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சூழ்நிலையில், 'சூரிய ஒளி மின்சார திட்டத்தை பெற இந்திய அதிகாரிகளுக்கு ரூ.25 கோடி டாலர் லஞ்சமாக அதானி கொடுத்துள்ளார். அதில் அமெரிக்கர்களை முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தி உள்ளார்' என நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. அவரை கைது செய்யவும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இது இந்திய அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை அதானி மறுத்து உள்ளார்.அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கென்ய அரசு, அதானி உடனான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. லஞ்சம் கொடுக்கவில்லை என தெரிவித்து இருந்தது.இந்நிலையில் கென்ய அதிபர் வில்லியம் ரூடோ கூறியதாவது: விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டு உள்ளேன். மேலும், மின்சார விநியோகம் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Vasoodhevun KK
நவ 25, 2024 09:23

இதன் பின்னணியில் உள்ளது என்ன.


Vasoodhevun KK
நவ 25, 2024 09:18

இதன் பின்னணியில் என்ன நடக்கிறது.


Saravanan Bala
நவ 23, 2024 05:57

ஒரு ஆட்சியை/ கட்சியை சப்போர்ட் பண்ணலாம் அது குடிமக்களின் உரிமை ஆனால் ஒரு திருடனுக்கு மூச்சு முட்ட தன் தலையால் முட்டு கொடுப்பதை ஜீரணிக்க முடியவில்லை ஜி


Easwar Kamal
நவ 22, 2024 18:16

இது ட்ரைலர்தான் அப்பு. அடுத்த மாசம் trumppan ஆட்சி பொறுப்பை ஏற்றால் இன்னும் நிலைமை மோசமாகும். அதிலும் மோடி இது போன்ற அதானி குழுமங்களோடு துணை போவது தெரிந்தால் அதுதான் 4 ஆண்டு சனி திசைதான்.


Tetra
நவ 22, 2024 11:43

இது நடந்து பல மாதங்கள் ஆகி விட்டது. அந்த ஊரில் அந்த ஊர் நீதிமன்றத்தில் ஒருவன் வழக்கு தொடர்ந்து அவர்கள் நீதிமன்றம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. காரணம் ? அவனுக்கு பணம் போகவில்லை. நம்ம ஊர் சுற்றி ராகு காலம் பின்னால் இருப்பது போல் தெரிகிறது


Saravanaperumal Thiruvadi
நவ 22, 2024 17:38

இப்படி இந்தளவுக்கு முட்டு கொடுக்க வேண்டுமா Sir


அப்பாவி
நவ 22, 2024 08:40

அவிங்களுக்கு கமிஷன் சரியா குடுக்கலேன்னா எப்பிடி? இளிச்ச வாயன்களா?


pmsamy
நவ 22, 2024 08:27

super


Jagan (Proud Sangi)
நவ 22, 2024 03:53

சீனனுக்கு போட்டி அதானி, எப்பிடி அடிக்கிறான் பாருங்க சீனன்


Raj
நவ 21, 2024 23:28

யானைக்கும் அடி சறுக்கும்.


சோலை பார்த்தி
நவ 21, 2024 22:16

ஒரு விசயம் நல்லா புரிஞ்சுக்கனும்.... பார்லிமென்ட் கூட போறதுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மட்டும் தான் அதானி அம்பானி மேல குற்றசாட்டுகள் வருது.. பாராளுமன்ற கூட்ட தொடர் நடக்காதபோது ஏன் குற்றசாட்டு வருவதில்லை... யோசிங்க.. எல்லாமும் எதிர்கட்சி மற்றும் இந்திய முன்னேற்றத்தை தடுக்கும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சி .. சீனா கிட்ட நன்கொடை.. இந்திய பணம் அச்சடிககும் இயந்திரத்தை பாக்கிஸ்தானுக்கு விற்றதன் கைமாறு தான்


புதிய வீடியோ